ஆச்சரியம் , அதிசயம் , மர்மம் நிறைந்த அமேசான் மழைக்காடுகள்...!
The Amazon rainforest is full of wonder, wonder and mystery.
அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு.
அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
இது உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது.
இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விஷயமாக இருக்கிறது.
இந்த காடுகள் ஆபத்தானவை., இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது.
இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.
அமேசான் காடுகளை உருவாக்கிய பெருமை அமேசான் நதிக்கே போய்ச் சேரும்.
அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும்.
உலகின் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.
எண்ணற்ற செடி கொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம், அமேசான் மழைக்காடுகள்.
இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளனஎன்றே கூற வேண்டும்.
அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீ ஆகும்.
மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும்.
இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.
உலகின் மொத்த ஆக்சிஜன் தயாரிப்பில் 20% அமேசான் மழைக்காடுகளில் இருக்கும் மரங்களின் மூலமாக தான் வெளிவருகிறது.
முன்னொரு காலத்தில், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் திசைக்கு நேர் மாறாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாம் அமேசான் நதி.
உலகில் உள்ள மழைக்காடுகளில் பாதி அளவுக்கு மேல் அமேசான் மழைக் காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானிய வண்ணத்துப்பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை குடிக்கின்ற பழக்கம் கொண்டிருக்கின்றன.
பிரேசிலில் அமேசான் நதிக்கு கீழே ஒரு நதி நான்கு கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது.
இதில் ஆச்சரியம் என்னவெனில், இது நூறுமடங்கு அகலமானது என கூறப்படுகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு நார்வே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை, அமேசான் மழைக் காடுகளை பாதுகாக்க கொடுத்தது.
உலகின் மற்ற நதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான அளவு நீரை வெளியேற்றுகிறது அமேசான் நதி.
பெருவில் இருக்கும் இக்விடோஸ் தான் உலகிலேயே பெரிய நகரம். சாலைகளால் இந்த நகரை தொடர்பு கொள்வது இயலாத காரியம்.
இது அடர்ந்த அமேசான் மழைக் காட்டுக்குள் இருக்கிறது.
இங்கு நான்கு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
அமேசான் நதிக்கு இடையே ஒரு பாலம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் பூச்சியினங்கள், 10,000-க்கும் அதிகமான தாவர வகைகள், ஏறத்தாழ 2000-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு அமேசான் மழைக் காடுகள் தான் தாயகமாக விளங்குகிறது.
உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வசிக்கின்றன.
அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில்நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீ.கள்)கொண்டதாக உள்ளது.
உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன.
அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும்.
அமேசான் மழைக்காடுகள், உலகின் மிகப்பெரிய உயிரியல்ஆய்வு பிரதேசமாகவும் விளங்குகிறது.
இங்கு ஓடும் அமேசான் பிரதான ஆறு 4,080 மைல் நீண்டு உள்ளது. அதன் வடிகால் 27,22,000 சதுர மைல்களை உள்ளடக்குகிறது.
உலகின் நதி நீரின் பதினாறு சதவிகிதம் ,அமேசான் டெல்டாவழியாக பாய்கிறது.
28 பில்லியன் கேலன்கள் நீர் ஒவ்வொருநிமிடத்துக்கும் அட்லாண்டிக் சமுத்திரத்துக்குள் பாய்கிறது.
இந்த ஆற்று தண்ணீர், கடலுக்குள் 100 க்கும் மேற்பட்ட மைல் வரைக்கும் கலந்து, கடலின் உப்புத்தன்மை செறிவை குறைக்கின்றது.
15 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு, அமேசான் நதி பசிபிக் பெருங்கடலில் மேற்குநோக்கி பாய்ந்துள்ளது.
தென் அமெரிக்க தகடு மற்றொரு டெக்டானிக் தட்டின் மீது நகர்த்தப்பட்ட இயற்கை மாற்றத்தால், ஆண்டிஸ் மலைகள் மெதுவாக உயர்ந்தன.
அமேசான் சூழல் கடுமையாக மாற்றப்பட்டது. பிறகு , அமேசான் நதிக்கு, அட்லாண்டிக் நோக்கி கிழக்கு வழி திறக்கபட்டதாக நம்பப்படுகிறது.
இந்த மழைக்காடுகளில், 500 பாலூட்டிகள், 175 பல்லிகளும் மற்றும் 300 க்கும்மேற்பட்ட ஊர்வனஇனங்கள், மற்றும் உலகின் பறவைகளின் மூன்றில் ஒரு பங்கு வாழ்கின்றன.
அமேசான் காடுகளில், நூறு சதவிகித ஆக்சிஜன் கிடைக்கிறது. இங்கு வாழம் உயிரினங்களின் வரலாறு காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர். தொன்மைக்காலம், இடைக்காலம், தற்காலம். சுமார் ஜம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி வடக்கே “லாரேசியா” தெற்கே “கோண்டுவானா” என இரண்டு நிலப்பரப்புகளாக இருந்தது. அதன் பின் 20-25 கோடி ஆண்டுகள் கடந்து, “பாஞ்சயா”என்ற ஒற்றைத்திட்டாக பூமி மாறிவிட்டது. புவித்தட்டு நகர்வால் “பாஞ்சயா”வும் உடைந்து, இப்போதுள்ள கண்டங்கள் உருவாகின என்பதும் புவியியல் ஆய்வாளர்களின் வெளிப்பாடாக உள்ளது.
“பாஞ்சயா” கண்டமாக இருந்த காலத்தில், கங்கோவின் துவக்க கால ஆற்று பகுதியில், அமேசான் ஆறு மேற்கு நோக்கி திசை திரும்பியது.
இதே கால கட்டத்தில் தென்அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா துண்டிக்கப்பட்டு எதிர்திசையில் நகர்ந்தது. இந்த இடைவெளியின் நடுவே உருவானதுதான் அட்லாண்டிக் பெருங்கடல். அதுவரை அமேசான் ஆறு மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலில் கலந்து கொண்டிருந்தது.
அந்த காலத்தில்தான் உலகில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.தென்அமெரிக்க பூமித்தட்டும் நாஸ்கா தட்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியதன் விளைவாக உருவானது தான் ஆண்டிஸ் மலைத்தொடர்.
ஆண்டிஸ் மலையின் எழுச்சியும் உலகில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்களும் அமேசான் ஆற்றையும் போக்கையும் மாற்றியன. அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன.
ஆண்டிஸ் மலை உயர்ந்ததால் பிரேசில் கயானாவில் இருந்த பாறை திட்டுகள் அமேசானின் ஓட்டத்தை தடுத்தன. இதே காலகட்டத்தில்தான் அமேசான் ஆற்றின் கரையின் இருபுறமும் நீரோட்டம் அதிகரித்து, அமேசான் மழைக்காடுகள் உருவாகின.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய அமேசான் இன்றும் தனி சிறப்புடன் தனது ஓட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இன்றியமையாததாக விளங்கும் அமேசான் காடுகளை அழிக்கும் நடவடிக்கை 6 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் மட்டும் 593 சதுர கி.மீ. பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் பிரேசில் அரசு சிறப்பு அதிரடிப்படை ஒன்றை நிறுவி காடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
பரப்பளவில் உலகின் 5–வது மிகப்பெரிய நாடான பிரேசிலில் 53 லட்சம் சதுர கிலோமீட்டர் பகுதி ,அடர்ந்த காடுகளலான பகுதியாகும். இது பெரும்பாலும் அமேசான் நதியைச் சுற்றி இருப்பதால் அமேசான் காடுகள் என்றே அழைக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் 17 லட்சம் ஏக்கர் பகுதிகள் அரசு பாதுகாப்பில் உள்ளது.
Bright Zoom

Reviewed by Bright Zoom
on
March 09, 2018
Rating:
No comments: