Bright Zoom Today News
ஜுன் 22 காலை நேரச் செய்திகள்
4 மாவட்டங்களில்... ரூ.1,000 நிவாரண உதவி... இன்று முதல் விநியோகம் - முக்கியச் செய்திகள் !
உலகச் செய்திகள்
600 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் மின்காந்த ரயில்:
சீனாவில் ஷாங்காய் நகரில் 600 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் மின்காந்த ரயில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
மாநிலச் செய்திகள்
ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி:
சீனாவுடனான எல்லை பதற்றத்தின் காரணமாக ஆயுதங்கள் வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கும் கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை சிறப்பு நிதி அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும்...:
தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக கடைகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாளை முதல் பகல் 2.00 மணி வரை:
புதுச்சேரியில் வர்த்தக நிறுவனங்கள், மதுபான கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் (ஜூன் 23) நாளை முதல் பகல் 2.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
ரூ.8.52 லட்சம் நிதி:
தமிழக அரசை ஊக்கப்படுத்தும் விதமாக, அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.8.52 லட்சம் வழங்கப்பட்டது.
வானில் தோன்றியது வளைய சூரிய கிரகணம்:
வானில் தோன்றும் அரிய நிகழ்வுகளின் ஒன்றான வளைவு சூரிய கிரகணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காணப்பட்டது.
தமிழக அரசு உத்தரவு:
தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்குபவர்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு உட்பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
இன்று முதல்:
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 நிவாரண உதவி இன்று (திங்கட்கிழமை) முதல் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்படவுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி:
குறுவை சாகுபடிக்காக மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், நேற்று காலை காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தை வந்தடைந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
முன்னாள் நடுவர் பக்னர் ஒப்புதல்:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு முறை தவறான தீர்ப்புகளை வழங்கியதாக முன்னாள் நடுவர் ஸ்டீவ் பக்னர் தெரிவித்துள்ளார்.
அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை:
ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அர்ஜூனா விருதிற்கு பிரனாய் பெயரை இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புறக்கணித்த நிலையில், பயிற்சியாளர் கோபிசந்த் அவரது பெயரை விருதிற்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

Bright Zoom Today News ஜுன் 22 காலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 22, 2020
Rating:
Reviewed by Bright Zoom
on
June 22, 2020
Rating:

No comments: