உலக வரலாற்றில் (22-6-20)இன்று
இதே நாளில் அன்று... வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்கள்
இதே நாளில் அன்று... வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்கள்
அடா யோனத்
👉 படிகவியலாளரான இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அடா யோனத் 1939ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் பிறந்தார்.
👉 ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
👉 இவர் தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆண்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என 20 ஆண்டுகால கடுமையான ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தார்.
👉ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009ஆம் ஆண்டு பெற்றார்.
👉 இவர் நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரியவர்.
டான் பிரவுன்
✍ கோடிக்கணக்கான வாசகர்களை கொண்ட எழுத்தாளர் டான் பிரவுன் 1964ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள எக்ஸிடரில் பிறந்தார்.
✍ பாடகர்-பாடலாசிரியர், பியானோ கலைஞர் என தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் ஹாலிவுட்க்கு 1991ஆம் ஆண்டு வந்தார். மேலும், இவர் 'டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ்", 'டிஸப்ஷன் பாயின்ட்", 'ஏஞ்சல்ஸ்ரூடெமான்ஸ்" ஆகிய புத்தகங்களை எழுதினார்.
✍ 2003ஆம் ஆண்டு வெளிவந்த இவரது 'தி டாவின்சி கோட்" என்ற புத்தகம் வெளிவந்த முதல் வாரத்திலேயே நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
முக்கிய நிகழ்வுகள்
✍ 1990ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் ஈலியா பிராங்க் மறைந்தார்.
உலக வரலாற்றில் (22-6-20)இன்று இதே நாளில் அன்று... வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்கள்
Reviewed by Bright Zoom
on
June 22, 2020
Rating:

No comments: