ஒன்பதாம்  வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் |

9th Standard Tamil - Muthollayiram,

TN 9th Std Tamil Book Back Q & A 

Lesson 7.3 – முத்தொள்ளாயிரம்


முத்தொள்ளாயிரம் (Muthollayiram)

மனப்பாடல் பகுதி

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.


சொல்லும் பொருளும் :

அள்ளல் – சேறு

பழனம் – நீர் மிக்க வயல்

வெரீஇ – அஞ்சி

பார்பபு – குஞ்சு

நாவலோ – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து

இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்

நந்து – சங்கு

கமுகு – பாக்கு

முத்தம் – முத்து


இலக்கணக் குறிப்பு :

அஞ்சி – பெயரச்சம்

வெண்குடை, இளங்கமுகு – பண்புத்தொகை

கொல்யானை, குவிமொட்டு – வினைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

கொண்ட = கொள்(ண்) + ட் + அ


கொள் – பகுதி

ண் – ஆனது விகாரம்

ட் – இறந்தகால இடைநிலை

இ – பெயரெச்ச விகுதி


நூல் வெளி :

வெண்பாவால் எழுதப்பட்ட நூல்  ன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது.

மூவேந்தர்களைப் பற்றிய பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தெள்ளாயிரம் என்று பெயர் பெற்றது.

நூல் முழுமையாக கிடைக்கவில்லை

புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில பதிப்பிக்கப்பட்டுள்ளன.

எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.

இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரகக் கருதப்படுகிறார்.

சேர நாட்டை அச்சமில்லாத நாடாகவும், சோழ நாட்டை ஏர்களச் சிறப்பும், போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக


1. சாெல்லும் பாெருளும் பாெருந்தியுள்ளது எது?

வருக்கை – இருக்கை

புள் – தாவரம்

அள்ளல் – சேறு

மடிவு – தொடக்கம்

விடை : மடிவு – தொடக்கம்


2. நக்சிலைவேல் காேக்காேதை நாடு, நல்யானைக் காேக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,


பாண்டிய நாடு, சேர நாடு

சாேழ நாடு, சேர நாடு

சேர நாடு, சாேழ நாடு

சாேழ நாடு, பாண்டிய நாடு

விடை : சேர நாடு, சாேழ நாடு


குறு வினா :

1. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?


சேறு – அள்ளல், வயல் – பழனம்


2. கொற்கை நகரில் முத்துக்களைப் போல் உள்ள பொருள்களாக் காட்டப்பட்டுவன எவை?


சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள்


சிறு வினா :

சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.


சேரர்:-

வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.


சோழர்:-

உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது.


பாண்டியர்:-

கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.


2. தற்குறிப்பேற்றவணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.


இலக்கணம்:-

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் மனக்கருத்தை ஏற்றிக் கூறவது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.


சான்று:-

“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்டதென வெரீஇப்பு ள்ளினம்”


விளக்கம்:-

இயல்பான நிகழ்வு – வயலில் ஆம்பல் மலர்தல்.

கவிஞர் மனக்கருத்து – நீர் பறவைகள் வெள்ளத்தில் தீப்பற்றியதாக எண்ணி வருந்தி தன் குஞ்சுகளை காத்தல்.

ஆகையால் இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.


கூடுதல் வினாக்கள் :

1. நீங்கள் வசிக்கும் பகுதி, வேந்தருள் யார் ஆண்ட நாடு என்பதை அறிந்து அவர்களைப் பற்றிய செய்தித் தொகுப்பேடு ஒன்றை உருவாக்குக


நாங்கள் வசிக்கும் பகுதி நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி என்னும் ஊர் ஆகும்.


தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட மன்னன் “சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்” ஆவார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்தப் பாண்டியரும் தென்காசி பெரிய கோயிலில் உள்ள சிவந்த பாதவூருடைய ஆதீன மடத்தில் முடிசூட்டிக் கொண்டனர்.


தென்காசி பெரிய கோயில் பிரம்மதேசம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றி கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் காணப்படுகின்றன.


2. நெல் விதைப்பது முதல் அரிசி புடைப்பது வரை, வயல்களக்காட்சியை அறிந்து தகுந்த படங்களுடன் காட்சிப்படுத்துக


9th Standard - muthollayiram - Vuluthal muthollayiram - Naduthal Vithaithal

உழுதல் விதைத்தல், நடுதல்

9th Standard - muthollayiram - Vuramiduthal 9th Standard - muthollayiram - Kalaiyeduthal

உரமிடுதல் களையெடுத்தல்

9th Standard - muthollayiram - Thalai Sainthu Nirkum Nerpayirgal 9th Standard - muthollayiram - Vayalveli

தலை சாய்ந்து நிற்கும் நெற்பயிர்கள் வயல்வெளி

9th Standard - muthollayiram - Aruvadai seithal 9th Standard - muthollayiram - Por Adithal

அறுவடை செய்தல் போர் அடித்தல்

9th Standard - muthollayiram - Mutaikalil Nel Alanthu Kattuthal 9th Standard - muthollayiram - Kaikuthal

மூட்டைகளில் நெல் அளந்து கட்டுதல் அரிசியாக்குதல்

9th Standard - muthollayiram - Arisi pudithal

அரிசி புடைத்தல்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் ___________


முத்தொள்ளாயிரம்

சிலப்பதிகாரம்

கம்பராமாயணம்

மகாபாரதம்

விடை : முத்தொள்ளாயிரம்


2. முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெற்ற மன்னர்கள் ___________


சேரர்

சோழர்

பாண்டியர்

மூவரும்

விடை : மூவரும்


3. அச்சமில்லா நாடாக பாடப்குதியில் காட்டப்படும் நாடு ___________ 


சேர நாடு

சோழ நாடு

பாண்டிய நாடு

பல்லவ நாடு

விடை : சோழ நாடு


4. ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடு ___________ 


சேர நாடு

பாண்டிய நாடு

சோழ நாடு

பல்லவ நாடு

விடை : சோழ நாடு


5. முத்துடை நாடாக பாடப்குதியில் காட்டப்படும் நாடு ___________ 


சேர நாடு

சோழ நாடு

பல்லவ நாடு

பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு


6. பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட நாடு ___________ 


சேர நாடு

சோழ நாடு

பல்லவ நாடு

பாண்டிய நாடு

விடை : சேர நாடு


7. முத்துகளான வெண் கொற்றக் குடை உள்ள நாடு ___________ 


சேர நாடு

சோழ நாடு

பல்லவ நாடு

பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு


10. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுக்க (முத்தொள்ளாயிரம்)


வெண்பாவால் எழுதப்பட்ட நூல்

மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்ட நூல்

நூல் முழுமையும் கிடைத்துள்ளது

எழுதியவர் தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை

விடை : நூல் முழுமையும் கிடைத்துள்ளது


9. நவலோ என்று அழைத்தவர் ___________


வீரர்கள்

உழவர்

சோழன்

சேரன்

விடை : உழவர்


10. பொருந்தாத இணையைக் கண்டறிக


கோக்கோதை நாடு – சேர நாடு

கோக்கிள்ளி நாடு – சோழ நாடு

முத்த வெண்குடையான் நாடு – பாண்டிய நாடு

நச்சிலைவேல் நாடு – சோழநாடு

விடை : நச்சிலைவேல் நாடு – சோழநாடு


11. “பந்தர்” என்பதை குறிக்கும் சொல் ___________


அரேபியர் வணகம் செய்த இடம்

பாக்கு

பந்தல்

முத்து

விடை : பந்தல்


12. “தென்னன் என்பதை குறிக்கும் சொல் ___________


சேரன்

சோழன்

பல்லவன்

பாண்டியன்

விடை : பாண்டியன்


கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு நாட்டின் வளத்தை பாடுவதை ___________ கவிமரபாகக் கொண்டிருந்தனர்.


விடை : புலவர்கள்


2. முத்தெள்ளாயிரத்தின் ஆசிரியர் ___________


விடை : அறிய இயலவில்லை


3. முத்தெள்ளாயிரம் ___________ பாடல்களை கொண்ட நூல்


விடை : 900


4. வயல்களில் விரிந்திருந்தவை ___________


விடை : அரக்காம்பல்


5. முத்தெள்ளாயிரத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________


விடை : 108 செய்யுட்கள்


குறு வினா

1. வயல்களில் செவ்வாம்மல் மலர்கள் மலர்ந்திருந்ததைக் கண்டு பறவைகள் அஞ்சக் காரணம் என்ன?


வயல்களில் செவ்வாம்மல் மலர்கள் மலர்ந்திருந்ததைக் கண்டு, நீரில் தீப்பிடித்தது என்று எண்ணி நீர்ப் பறவைகள் அஞ்சியது.



2. சேர நாட்டு வளமென முத்தெள்ளாயிரம் குறிப்பிடுவதினை எழுதுக


வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.


3. பாண்டிய நாட்டு வளமென முத்தெள்ளாயிரம் குறிப்பிடுவதினை எழுதுக


கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.


 


Reviewed by Bright Zoom on November 15, 2023 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.