ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்வி பதில்கள்
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே - என்ற பாடல் வரிகள் ஆசிரியர் - ஈரோடு தமிழன்பன்
தமிழோவியம் எனும் தலைப்பில் பாடலை இயற்றியவர் - ஈரோடு தமிழன்பன்
தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் என்று கூறியவர் - ஈரோடு தமிழன்பன்
ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை எழுதியவர் - ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன் எழுதிய எந்த கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது - வணக்கம் வள்ளுவ
தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பனின் நூல் - தமிழன்பன் கவிதைகள்
தமிழன்பனின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் - ஹிந்தி உருது மலையாளம் ஆங்கிலம்
உலகத் தாய்மொழி நாள் - பிப்ரவரி 21
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று கூறிய நூல் - பிங்கல நிகண்டு
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் - சிங்கப்பூர் இலங்கை
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம் என்று பாடியவர் - பாரதியார்
தமிழின் இனிமை இலக்கியவளம் பாச்சிறப்பு சுவை அழகு திறம் தகுதி ஆகியன விரவியுள்ள சிற்றிலக்கியம் - தமிழ்விடு தூது
தித்திக்கும் தெள்அமுதாய் தெள்ளமுதின் மேலான என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் - தமிழ்விடு தூது
மூன்று இனம் என்பவை - துறை தாழிசை விருத்தம்
இரண்டு கண்களை போல் எழுந்து எழுந்து பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு பெயர் - கண்ணி
தமிழில் இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை - கண்ணி
முக்குணம் - சத்துவம், ராசசம், தாமசம்
அமைதி மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம் - சத்துவம்
போர் தீவிரமான செயல்களை குறிக்கும் குணம் - ராசசம்
சோம்பல் தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம் - தாமசம்
பத்து குண அணிகள் - செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி
தமிழ்விடு தூது கூறும் 5 வண்ணங்கள் - வெள்ளை சிவப்பு கறுப்பு மஞ்சள் பச்சை
நவரசம் என்பது - வீரம் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் கோபம் நகை சமநிலை
ஒன்பது சுவை என்பது - நவரசம்
அழகு 8 பெற்றுள்ளது - தமிழ் (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)
தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள் - சந்து இலக்கியம், வாயில் இலக்கியம்
தூது இலக்கியத்தின் பாவகை - கலிவெண்பா
தமிழ்விடு தூது பாடல் யாருக்கு தூண்டுவதாக அமைந்துள்ளது? - மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர்க்கு
தமிழ்விடு தூது பாடலில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 268 கண்ணிகள்
தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் - 1930 உ.வே.சா.
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் பெயர் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் என்று ஐம்பெரும் காப்பியங்களையும் தமிழ் அன்னைக்கு சூட்டி கவிதை இயற்றியவர் - கவியோகி சுத்தானந்த பாரதியார்
Cyberspace என்பது - இணையவெளி
ஆங்கிலத்தில் நேவி என்பது எம்மொழிச் சொல்? - தமிழ்ச் சொல்லாகிய நாவாய் என்பது
உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது - கிரேக்க மொழி
தமிழிலிருந்து கிரேக்கத்தில் வழங்கிவரும் சொற்கள்:
தமிழ் கிரேக்கம்
எறிதிரை எறுதிரான்
கலன் கலயுகோய்
நீர் நீரியோஸ்
நாவாய் நாயு
தோணி தோணீஸ்
--------- சார்ந்த சொற்களை தமிழில் கிரேக்க மொழியிலும் ஒப்பாக காணமுடிகிறது - கவிதை சார்ந்த
பா என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பாய்யியோனா
அப்பல்லோ என்னும் கடவுளுக்கு பாடப்படுவதாக கிரேக்கத்தில் குறிப்பிடப்படும் பாவகை இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? - பா என குறிப்பிடப்படுகிறது
வெண்பாவின் ஓசை - செப்பலோசை
கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - சாப்போ
சாப்போ என்பது கிரேக்கத்திலிருந்து லத்தீன் மொழிக்கு வந்தபின் ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்படுகிறது? - சேப்பிக் ஸ்டேன்சா
பாவின் சுவைகளில் ஒன்றான துன்ப சுவையினை தமிழ் இலக்கணங்கள் எவ்வாறு சுட்டுகின்றன? - இளிவரல்
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - இளிகியா
இலியாத்து காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது? - கிபி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது
கிரேக்க நூலின் பெயரிலேயே தமிழ்ச்சொல் இருப்பதாக கூறப்படும் நூல் பெயர் - எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் எனும் நூல்
எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் என்பதன் பொருள் - கடலைச் சார்ந்த பெரிய புலம்
கிரேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடல் வழியாக வரவேண்டும் என்பதை குறிப்பிடும் நூல் எது? - கிரேக்க நூல் ஒன்று
பட்ட மரம் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் - கவிஞர் தமிழ் ஒளி
கந்தம் என்பதன் பொருள் - மணம்
கவிஞர் தமிழ் ஒளி பிறந்த ஊர் - புதுவை (1924 - 1965)
பாரதியாரின் வழிதோன்றல் ஆகும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர் யார்? - கவிஞர் தமிழ் ஒளி
பட்ட மரம் எனும் தலைப்பிலான கவிதை இடம் பெற்ற நூல் - தமிழ் ஒளியின் கவிதைகள்
காவிரியின் பாதை எல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிற நூல் எது? - பெரியபுராணம்
மா என்பதன் பொருள் - வண்டு
தரளம் என்பதன் பொருள் - முத்து
பணிலம், சுரி வளை என்பதன் பொருள் - சங்கு
மாடு என்பதன் பொருள் - பக்கம்
கோடு என்பதன் பொருள் - குளக்கரை
சூடு என்பதன் பொருள் - நெல் அரிக்கட்டு
வேரி என்பதன் பொருள் - தேன்
அடியார் பெருமையை ஓரடியில் கூறும் நூல் - சுந்தரரின் திருத்தொண்டத் தொகை
ஒவ்வொரு பாடலிலும் அடியாரின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ள நூல் - நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி
திருத்தொண்டர் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி இவ்விரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - சேக்கிழாரின் பெரிய புராணம்
ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு அடியாராக 63 அடியார்களின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் - திருத்தொண்டர் புராணம்
சேக்கிழாரின் காலம் - கிபி 12ஆம் நூற்றாண்டு
சேக்கிழார் எந்த அரசரின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்? - சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில்
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று சேக்கிழாரை பாராட்டியவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ என்று பாடியவர் - பாரதியார்
நம் முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்குபவர்களை எவ்வாறு போற்றினர்? - உயிரை உருவாக்குபவர்கள்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் புறநானூற்று பாடலை பாடியவர் யார்? - பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது
சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு எடுத்துரைப்பது - பொருண்மொழிக் காஞ்சித் துறை
பண்டைய வேந்தர்களின் வீரம் வெற்றி கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் புலவர்கள் சான்றோர்கள் புலவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் கூறும் நூல் - புறநானூறு
தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டு அடையாளமாக திகழும் நூல் - புறநானூறு
குளம் தொட்டு கோடு பதித்து எனும் பாடல் இடம் பெற்ற நூல் - சிறுபஞ்சமூலம்
தண்ணீர் எனும் சிறுகதை எழுதியவர் - கந்தர்வன்
கந்தர்வனின் இயற்பெயர் - நாகலிங்கம்
கந்தர்வனின் ஊர் - ராமநாதபுரம் மாவட்டம்
கந்தர்வன் எங்கு பணியாற்றினார்? - தமிழ்நாடு அரசின் கருவூல கணக்குத் துறை
புகார் நகரில் உள்ள அதிகம் தொடர்புடையதாக திகழ்ந்த விழா - இந்திர விழா
காலத்தை கணக்கிட்டு சொல்லுபவர்கள் - காலக்கணிதர்கள்
இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்? - 28 நாட்கள்
தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழும் நூல்கள் - மணிமேகலை சிலப்பதிகாரம்
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது? - மணிமேகலை ( மணிமேகலை துறவு)
பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் இது? - மணிமேகலை
சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த காப்பியம் எது? - மணிமேகலை
மணிமேகலை நூலின் முதல் காதை எது? - விழாவறை காதை
மணிமேகலையில் மொத்தம் அமைந்துள்ள காதைகள் எத்தனை? - முப்பது காதைகள்
மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்? - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன? - சாத்தன்
திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் யார்? - சீத்தலை சாத்தனார்
சீத்தலைச் சாத்தனார் செய்துவந்த தொழில் யாது? - கூலவாணிகம்
கூலம் என்பதன் பொருள் என்ன? - தானியம்
சீத்தலைச் சாத்தனார் யாருடைய சமகாலத்தவர்? - இளங்கோவடிகளின் சமகாலத்தவர் (நண்பர்)
தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று சீத்தலைச் சாத்தனார் பாடியவர் யார்? - இளங்கோவடிகள்
1863 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னை பல்லாவரம் சென்னை மேட்டுப்பகுதியில் எலும்பையும் கருவியையும் கண்டுபிடித்தார் ( இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் இது)
ரோமானியரின் பழங்காசுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன? - கோவையில்
ரோமானியரின் மட்பாண்டங்கள் எங்கு கிடைத்தன? - அரிக்கமேடு அகழாய்வு
ஒன்பதாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் கேள்வி பதில்கள்
Reviewed by Bright Zoom
on
March 22, 2019
Rating:
No comments: