7ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ் 1



7ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்

பொதுத்தமிழ் 1

1. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படுவது எது? - மதுரை

2. மதுரை என்னும் சொல்லுக்கான பொருள் தருக. - இனிமை

3. பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது? - முத்து

4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் யார்? - குமரகுருபரர்

5. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்? - மருது பாண்டியர்


6. கோவலன் பொட்டல் என வழங்கப்படுவதன் காரணம் என்ன? - சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம், கோவலன் பொட்டல் என அழைக்கப்படுகிறது.

7. மதுரை என்பது ............ பெயர். - இடப்பெயர்

8. பபூகொடி ப்பூ பறிக்கிறாள். இத்தொடரிலுள்ள ′பூ′ என்பது ............ பெயர். - பொருட்பெயர்

9. சதுரம் என்பது ............. பெயர். - குணப்பெயர்

10. நிகரற்ற தொழில் ............... - உழவுத் தொழில்

11. உழவர்கள் செல்வமாகக் கருதுவது ................ - நெல்மணி

12. அம்மானை என்பது ................ விளையாடும் விளையாட்டு. - பெண்கள்

13. அம்மானைப் பாடலில் போற்றப்படும் தெய்வம் ............. - முருகன்

14. முருகனால் சிறையிலிடப்பட்டவன் - நான்முகன்

15. மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் - பேகன்

16. ′அணிவதாலல்லவோ′ - பிரித்து எழுதுக. - அணிவதால் + அல்லவோ

17. ′செவ்விதழ்′ - பிரித்து எழுதுக. - செம்மை + இதழ்

18. ′அறிவுண்டாம்′ - பிரித்து எழுதுக. - அறிவு + உண்டாம்

19. ′உடற்குண்டாம்′ - பிரித்து எழுதுக. - உடற்கு + உண்டாம்

20. ′விலையில்லா′ - பிரித்து எழுதுக. - விலை + இல்லா

7ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ் 1  7ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்  பொதுத்தமிழ் 1 Reviewed by Bright Zoom on February 13, 2019 Rating: 5

1 comment:

  1. நான்காம் தமிழ்ச் சங்கம் பாண்டித்துரையார்.

    ReplyDelete

Other Posts

Powered by Blogger.