ஒன்பதாம் வகுப்பு தமிழ்
(New Book)
கேள்வி பதில்கள் ....!
உரைநடை
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
- டாக்டர் முத்துலட்சுமி
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
- டாக்டர் முத்துலட்சுமி
சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
- டாக்டர் முத்துலட்சுமி
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- டாக்டர் முத்துலட்சுமி
அடையாறில் அவ்வை இல்லம் துவங்கப்பட்ட ஆண்டு - 1930
சென்னை அடையாறு புற்றுநோய் மையம் துவங்கப்பட்ட ஆண்டு - 1952
பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ
- பாரதிதாசன்
முதன்முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த குழு
- (1882) ஹண்டர் குழு
முதன் முதலாக பெண்களுக்கான பள்ளி திறக்கப்பட்ட மாநிலம்
- மராட்டிய மாநிலம்
முதன்முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்கள்
- ஜோதிராவ் பூலே
சாவித்திரிபாய் பூலே
மூவலூர் ராமாமிருதம் அம்மையார் திருமண உதவித் தொகை யாருக்கு வழங்கப்படுகிறது
- எட்டாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு
பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவ படித்துமுடித்து வேலூரில் வந்து இலவச மருத்துவ சேவை செய்தவர்
- ஐ டாஸ் சோபியா கட்டர் (1870-1960)
முதன் முதலில் பெண்களுக்கான பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு - 1848
நாட்டின் முதல் பெண் பள்ளி ஆசிரியர் - ஜோதிபாய் பூலே
2014 ல் நோபல் பரிசு பெற்றவர் - கைலாஷ் சத்யார்த்தி
கைலாஷ் சத்யார்த்தி இதுவரை எத்தனை குழந்தைகள் கல்வி பெற உதவினார் - 80 ஆயிரம் குழந்தைகள்
பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி அதற்காக போராடி நோபல் பரிசு பெற்ற சிறுமி - யூசுப் மலாலா (பாகிஸ்தானில் பெண் கல்வியை வேண்டுமென அவர் போராடத் தொடங்கிய போது (1997) வயது 12)
பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்
ஈவேரா நாகம்மை கல்வி உதவித் திட்டம் - பட்டமேற்படிப்பு
சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம் - திருமணம் மற்றும் கல்வி உதவித்தொகை தொடர்பானது
தனது பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை பரிந்துரைத்த குழு - கோத்தாரிக் கல்விக் குழு (1964)
சாரதா சட்டம் என்பது - குழந்தை திருமண தடைச் சட்டம் (1929)
திருமந்திரம் தொல்காப்பியம் கைவல்யம் போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவாற்றியவர் - ஈ. த. ராஜேஸ்வரி அம்மையார்
எதன் வருகைக்குப்பின் தந்தியின் பயன்பாடு குறைந்தது - குறுஞ்செய்தி
மனிதனின் பயண நேரம் எதனால் குறைந்துள்ளது - அறிவியல் முன்னேற்றத்தால்
ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - செஸ்டர் கார்ல்சன் (நியூயார்க்) - (சட்ட வல்லுனரும் பகுதிநேர ஆய்வாளரும் )
உலகின் முதல் ஜெராக்ஸ் (ஒளிப்படி) எடுக்கப்பட்ட ஆண்டு - 1938
உலகின் முதல் ஜெராக்ஸ் (ஒளிப்படி) எதனைக் கொண்டு எடுக்கப்பட்டது? - கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு
சீரோ கிராபி என்பது எந்த மொழிச்சொல் - கிரேக்க மொழி
சீரோ கிராபி என்பதன் பொருள் - உலர் எழுத்துமுறை
ஜெராக்ஸ் இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -- 1959
ஒளிபடங்களையும் கோப்புகளையும் உடனடியாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப பயன்படுவது - தொலைநகல்
குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டு (fax) அதற்குரிய காப்புரிமையை பெற்றவர் (தொலைநகல்) - அலெக்சாண்டர் பெயின் (ஸ்காட்லாந்து - 1846)
இப்போது நாட்டு இயற்பியல் அறிஞர் ஜியோவான்னி காசில்லி உருவாக்கிய தொலைநகல் கருவியின் பெயர் - பான்டெலிகிராப்
ஜியோவான்னி காசில்லி - கண்டுபிடிப்பை கொண்டு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட இடம் - பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு (1865)
தொலைநகல் சேவை கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது ? - 11 ஆண்டுகளுக்கு பின்பு
கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் - ஹாங்க் மாக்னஸ்கி (அமெரிக்கா - 1985)
ஹாங்க் மாக்னஸ்கி தனது தொலை நகல் எடுக்கும் கருவியை எப்பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தார்? - காமா பேக்ஸ்
தானியக்க பண இயந்திரமான ஏடிஎம் ஐ கண்டுபிடித்தவர் - ஜான் ஷெப்பர்டு பாரன் தலைமையிலான குழு
ATM இயந்திரம் எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? - 1967 June 27 (பார்க்லேஸ் வங்கிக்காக லண்டனில்)
ஏடிஎம் இயந்திரம் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது - சாக்லேட்டை வெளித்தள்ளும் இயந்திரம்
முதன்முதலில் ஏடிஎம் இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட அட்டை - வங்கியில் வழங்கப்பட்ட காசோலை (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்)
அட்டை பயன்படுத்தும் இயந்திரம் - கட்டணம் செலுத்தும் கருவி விற்பனை கருவி
ஏடிஎம் அட்டை யை கண்டுபிடித்தவர் - ஆட்ரியன் ஆஷ்பீல்டு (1962)
தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளன? - திறன் அட்டைகளாக
வருகைப் பதிவு மற்றும் வேளியேறுகைபதிவுகாகவும் பயன்படுத்தப்படும் கருவி - ஆளரி சோதனைக் கருவி
இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் - மைக்கேல் ஆல்ட்ரிச் (1979 - இங்கிலாந்து)
இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்ட இடம் - (1989) அமெரிக்காவில்
வையக விரிவு வலை வழங்கியை (server) உருவாக்கியவர் - (1990) டிம் பெர்னெர்ஸ் லீ
இணையத்தில் இது இல்லை எனில் உலகத்தில் அது நடைபெறவேயில்லை - டிம் பெர்னெர்ஸ் லீ (புகழ்பெற்ற வாசகம்)
இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த வருடம் - 1991
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு - தேசிய திறனாய்வு தேர்வு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு - தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு
கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வு - ஊரக திறனாய்வு தேர்வு
எவை இன்றி உலகம் இயங்குவது இல்லை - இயந்திரங்களும் கணினிகளும்
வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தபடுபவை - மாடுகள்
முல்லை மற்றும் மருத நிலங்களில் கால்கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடு ஆகியுள்ளது - ஏறு தழுவுதல்
தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு - ஏறு தழுவுதல்
இளைஞர்களின் வீரத்தை பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு - ஏறு தழுவுதல்
ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சங்க இலக்கியம் - கலித்தொகை
முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும் நிகழ்வு - ஏறு தழுவுதல்
எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு. கவிழ்ந்தன மருப்பு. கலங்கினர் பலர் - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல் - முல்லைக்கலி (கலித்தொகை)
ஏறுதழுவுதல் களம் குறித்து அடிகள், காட்சியை கண் முன்னே நிறுத்துவதும், காளைகளின் பாய்ச்சல் பற்றியும் கூறும் நூல் - கலித்தொகை
மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருதநிலத்து போர்வீரர்களை நிகர்த்தனவாக இருந்தது - காளைகள்
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை - பாடல் வரி இடம்பெற்ற நூல் கலித்தொகை
கலித்தொகை தவிர சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் - ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது
ஏறு தழுவுதல் பற்றி பிற்காலச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான எந்த இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன - பள்ளு இலக்கியம்
----------------என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது - எருதுகட்டி
காளைப்போர் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ள இடங்கள் - பெனி - ஹாசன் (எகிப்து) சித்திரங்களிலும்; (கிரீட் தீவு) கினோஸஸ் -அரண்மனை சித்திரங்களிலும்
எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் உள்ள இடம் - சேலம் மாவட்டம் (கோவூரிச்சங்கன் கருவந்துறை)
கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் உள்ள இடம் - (நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே) கரிக்கையூர்
திமிலுடன் கூடிய காளை ஒன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் உள்ள இடம் - கல்லூத்து மேட்டுப்பட்டி (மதுரை உசிலம்பட்டி அருகே)
திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ள இடம் - சித்திரக்கல் புடவில் (தேனி மயிலாடும்பாறை அருகே)
சிந்துவெளி நாகரிகம் வரலாற்றிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது - காளை
சிந்துவெளி அகழாய்வில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரையொன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமாக ஏறு தழுவுதலை குறிப்பதாக தெரிவித்துள்ளவர் - ஐராவதம் மகாதேவன்
ஏறு தழுவுதல் என்பது
முல்லை நிலத்து மக்களின் அடையாளம்
மருத நிலத்து வேளாண்குடிகளின் தொழில் உற்பத்தி
பாலை நில மக்களின் போக்குவரத்து தொழில்
வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்துள்ளது - ஏறு தழுவுதல்
ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளைமாடுகள் - ஏர் மாடுகள் எருதுகள் ஏறுகள்
சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற - வளையத்தினைக் குறிக்கும்
எதனால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் உள்ளது? - புளியங்கொம்பினால்
மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் உள்ளது - மேலைநாடுகளில் நடத்தப்படும் காளை விளையாட்டு
இந்திய நீர் பாசனத்தின் தந்தை - சர் ஆர்தர் காட்டன் ( பொறியாளர்)
1829 காவிரிப் பாசனப் பகுதிக்கு தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர் - சர் ஆர்தர் காட்டன்
சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு சூட்டிய புதிய பெயர் - கிராண்ட் அணைக்கட்டு
சர் ஆர்தர் காட்டன் 1873 ல் கோதாவரி ஆற்றின் குறுக்கே தவ்ளீஸ்வரம் அணையை கட்ட பயன்படுத்திய கட்டுமான உத்தி எது? - கல்லணையின் கட்டுமான உத்தி
ஒரு நாட்டின் வளர்ச்சிப் போக்கை நெறிப்படுத்துவதே - நீர் மேலாண்மை தான்
தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதியில் உள்ளது
----------------------------ல் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவன் - தமிழ் மரபில்
சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலை குளிர வைத்தல் - குளிர்த்தல்
குளிர்த்தல் என்பது குளித்தல் என ஆயிற்று என விளக்குபவர் - தொ. பரமசிவன்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்பவர் - ஆண்டாள்
தெய்வச் சிலைகளை குளிர்க்க வைப்பதை என்னவென்று கூறுவர்? திருமஞ்சனமாடல்
நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உள்ள இலக்கியம் - சிற்றிலக்கியம் ஆகிய பிள்ளைத்தமிழ்
நீராடுதல் சம்பந்தமான நிகழ்வுகள்
திருமணமான பின் - கடலாடுதல்
இறப்புச் சடங்கில் - நீர் மாலை எடுத்து வருதல்
அம்மை - தலைக்கு தண்ணீர் ஊற்றுதல்
மாதம் தோறும் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது தமிழர்கள் மரபாகவே கொண்டாடிய நாட்கள் - சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்
சனி நீராடு என்பது யாருடைய வாக்கு? - அவ்வையின் வாக்கு
நிலத்தடி நீர்வளம் குறைந்த காணப்படும் நாடுகள் - இந்தியா பாகிஸ்தான் அமெரிக்கா சீனா
இம்மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே 700 அடி வரை ஆழ்குழாய்கள் இறக்கியும் நீர் கிடைக்கவில்லை - ராஜஸ்தான் மாநிலத்தில்
பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் - இலஞ்சி
தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை - சிறை
குளிப்பதற்கு ஏற்ற சிறுகுளம் - குண்டு
சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை - குண்டம்
பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் - கண்மாய்
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை - கூவல்
சரளை நிலத்தில் தோண்டி கல் செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு - கட்டு கிணறு
தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய வற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் - ஜான் பென்னிகுவிக்
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் எந்த ஆற்றின் வழியாக கடலில் கலந்தது? பெரியாற்றின் வழியாக
ஒன்பதாம் வகுப்பு தமிழ்(New Book) கேள்வி பதில்கள் ....!!
Reviewed by Bright Zoom
on
March 22, 2019
Rating:
நன்று
ReplyDelete