புதிய பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
Bright Zoom
1. ஏற்றத் தாழ்வற்ற ................. அமைய வேண்டும். - சமூகம்
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு .............. ஆக இருக்கும். - அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ................. - நிலவென்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ................... - தமிழெங்கள்
5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? - அமுது + என்று
6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? - செம்மை + பயிர்
7. பொருத்துக.
அ) விளைவுக்கு - 1) பால்
ஆ) அறிவுக்கு - 2) வேல்
இ) இளமைக்கு - 3) நீர்
ஈ) புலவர்க்கு - 4) தோள்
யுளெ: 3 4 1 2
8. தாய்மொழியில் படித்தால் ................ அடையலாம். - மேன்மை
9. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ................... சுருங்கிவிட்டது. - மேதினி
10. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதப் கிடைப்பது? - செம்மை + தமிழ்
11. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? - பொய் + அகற்றும்
12. பாட்டு + இருக்கும் என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது? - பாட்டிருக்கும்
13. எட்டு + திசை என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது? - எட்டுத்திசை
14. ′தொன்மை′ என்னும் சொல்லின் பொருள் ................... - பழமை
15. ′இடப்புறம்′ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ..................... - இடது + புறம்
6ஆம் வகுப்பு - முதல் பருவம் பொதுத்தமிழ்
Reviewed by Bright Zoom
on
February 14, 2019
Rating:
No comments: