டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு ஏன் ? எதற்க்கு? நடத்துகிறது.
கீழ்கண்ட துறைகளில் உள்ள
காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்துகிறது.
காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்துகிறது.
1. துணை வணிகவரி அதிகாரி,
2. சார்-பதிவாளர்,
3. சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி,
4. உதவி தொழிலாளர் ஆய்வாளர்,
5. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
(பொது),
6. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்),
7. லஞ்ச ஒழிப்புத்துறைசிறப்பு உதவியாளர்,
8. டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி,
9. உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்,
10. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்,
11. தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்,
12. கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்,
13. வேளாண்மை விற்பனைத் துறை மேற்பார்வையாளர்,
14. கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,
15. பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2)
காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்துகிறது.
யார் எழுதலாம்?
1. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் குரூப்-2 தேர்வை எழுதலாம்.
2. வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30.
3. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும்,
பொதுப் பிரிவு உள்பட அனைத்து
வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.
4. ஆனால், துணை வணிகவரி அதிகாரி பணிக்கு மட்டும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. கூடுதல் கல்வித் தகுதியாக பி.எல். முடித்திருந்தால் 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
6. இதே வயது வரம்புத் தளர்வு, பொதுப் பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வயது வரம்பை 32 ஆக நிர்ணயித்துள்ளனர்.
7. மேலும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) பணிக்குப் பொதுப் பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வின் நிலை
குரூப்-2 தேர்வானது,
1. முதல்நிலைத் தேர்வு,
2. முதன்மைத் தேர்வு,
3. நேர்காணல்
என மூன்று நிலைகளை உள்ளடக்கியது.
முதல்நிலைத் தேர்வை வடிகட்டும் தேர்வு என்று சொல்லலாம்.
• “ஒரு காலியிடத்துக்கு 10 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
• முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு (75 கேள்விகள்),
• பகுத்தாராயும் திறன் (25 கேள்விகள்) பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
• அத்துடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்கள் கேட்பார்கள்.
• மொத்தம் 300 மதிப்பெண்கள்.
• இரண்டாம் கட்ட தேர்வான, முதன்மைத்தேர்வு விரிவாக விடை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
• இதற்கு 300 மதிப்பெண்கள். நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.
• முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
தமிழுக்கு முதலிடம்
1. பொது அறிவு, பொதுத் தமிழ், பொது ஆங்கிலப் பாடங்களுக்கான பாடத்திட்டம் தொடர்பான விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் www.tnpsc.gov.in www.tnpscexams.net விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
2. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
3. அந்த வகையில், குரூப்-2 தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கல்வித் தகுதியான பட்டப் படிப்பைத் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு
4. மொத்தமுள்ள காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
முதலில் தெரிவிக்க வேண்டும்
1. அதேபோல், வருவாய் உதவியாளர் பணியில் பெண்களுக்கான 30 சதவீத ஒதுக்கீட்டில், 10 சதவீதம் ஆதரவற்ற விதவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2. பட்டப் படிப்பைத் தமிழ்வழியில் படித்தவர்களும், ஆதரவற்ற விதவைகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இந்த விவரத்தைப் பதிவுசெய்துவிட வேண்டும்.
3. அவ்வாறு செய்யாமல் முதன்மைத் தேர்வு நேரத்திலோ நேர்முகத் தேர்வு சமயத்திலோ சொன்னால் தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியாது.
மொழிப் பாடம் எவ்வளவு முக்கியம்?
1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ, 4, 7 பி, 8 பணியிடங்களுக்கான தேர்வுகளில் மாணவர்களின் மொழித் திறனைச் சோதிக்கும் வகையில் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றன.
2. பொது அறிவு, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்டவைக்கு இணையான முக்கியத்துவத்தை மொழி பாடத்துக்குத் தந்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும்.
3. மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலப் பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தமிழ்வழிப் படித்தவர்கள் தமிழைத் தேர்வு செய்துகொள்வது நல்லது.
முழு மதிப்பெண் பெற
1. பாடத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு தரத்தில் மொழித்தாள் கேள்விகள் அமைந்திருக்கும்.
2. இந்தத் தாளுக்கு மாணவர்கள் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மொழி பாடநூல்களைப் படிக்க வேண்டும்.
3. மொழித் தாளை நன்கு படித்துவிட்டால் கைவசம் 100 கேள்விகளுக்கு விடையிருக்கும்.
4. பொது அறிவுத் தாளுக்கு ஒதுக்குகிற நேரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நேரத்தை ஒதுக்கினால் போதும்,
5. மொழித் தாளில் முழு மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.
6. ஒவ்வொரு மதிப்பெண்ணும் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
7. எனவே மொழித் தாள் பாடத்தில் இயன்றவரை அதிக மதிப்பெண்களைப் பெறுவது வெற்றியைச் சுலபமாக்கும்.
சிறந்த வழி
1. பாடத்தை நேரடியாகப் புரிந்துகொள்ளாமல் எதிர்மறைக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது சிரமமானது.
எனவே பாடநூல்களை வாங்கி அல்லது தமிழ் நாடு பாடநூல் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து தரவிறக்கி முழுமையாகப் படிப்பதே தேர்வை எதிர்கொள்வதற்கு சிறந்த வழி.
2. மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை இதெல்லாம்கூடவா கேள்வியாகக் கேட்பார்கள் என்று யோசிக்கவே கூடாது.
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வு என்பதால், கேள்விகள் பெரும்பாலும் வடிகட்டும் நோக்கத்திலேயே வடிவமைக்கப்படுகின்றன.
எனவே எந்த ஒரு வார்த்தையையும் அலட்சியம் செய்யக்கூடாது.
தமிழா, ஆங்கிலமா?
1. குரூப் 2 தேர்வுகளில் தேர்வுக்கான மொழிப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகத் தேவை.
2. ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகப் படிக்கும் சில மாணவர்கள், தமிழ் கடினமாக இருக்குமோ என்று அஞ்சி, ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.
3. ஆனால், ஆங்கிலத்தைப் படித்துப் புரிந்துகொள்வதற்கும், ஆங்கில இலக்கண அறிவுக்கும் வேறுபாடு இருக்கிறது.
4. இந்தக் குழப்பத்தின் விளைவால் சில சமயங்களில் மதிப்பெண்கள் குறையவும் நேரலாம்.
அதனால் மொழிப்பாடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு கடந்த ஆண்டு கேள்வித்தாள்களை ஒருமுறை படித்துவிட்டு,
5. அதன் பிறகு முடிவெடுப்பது நன்று.
6. கடந்த ஆண்டு நடந்த சில குரூப் 2 நிலை தேர்வுகளில் பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மொழிப்பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
7. ஏறக்குறைய எட்டுக் கேள்விகள்
என்பதாக அதன் விகிதம் அமைந்திருந்தது.
8. எனவே நேரம் வாய்த்தால், மேனிலைப் பள்ளி மொழிப்பாடங்களையும் படித்துக்கொள்வது நல்லது.
BrightZoom
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு ஏன் ? எதற்க்கு? நடத்துகிறது.
Reviewed by Bright Zoom
on
February 13, 2018
Rating:
No comments: