இன்றைய ஒருவரிச் செய்திகள் !!


இன்றைய ஒருவரிச் செய்திகள் !!

தமிழகத்தில் மானிய விலையில் இரு சக்கர வாகன திட்டத்தின் பயனாளிகளுக்கு ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட் வைத்திருப்பதை கட்டாயப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்கன்வாடிகளில் உணவுப்பொருட்களுக்கு பதில் ரொக்கம் வழங்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வேண்டும் எனில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், கல்வி நிறுவனங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மின் ஊழியர்களுக்கு, 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே நேற்று கையெழுத்தானது.
பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கும் திட்டமில்லை என்று தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹh கூறியுள்ளார்.

மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான விருது வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள அணுஉலை ஒன்றுக்கு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட அணுஉலை என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டிஎஸ்பியாக பதவி ஏற்க உள்ளார்.

பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

bright Zoom

இன்றைய ஒருவரிச் செய்திகள் !!    இன்றைய ஒருவரிச் செய்திகள் !! Reviewed by Bright Zoom on February 23, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.