தமிழக அரசின் பாவேந்தரர் பாரதிதாசன் விருது:
திராவிட, பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் வைத்து புரட்சிகரமான பாடல்களாக தமிழில் இயற்றி, தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் புரட்சிக்கவி, பாவேந்தர் என அழைக்கப்படும் பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்க் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.
இதுவரை பாவேந்தர் பாரதிதாசன் விருதை பெற்றோர்
» 1978 - கவிஞர் சுரதா
» 1979 - எஸ்.டி. சுந்தரம், கவிஞர் வாணிதாசன்
» 1980 - கவிஞர் முத்துலிங்கம்
» 1981 - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» 1982 - கவிஞர் புத்தனேரி சுப்ரமணியம்
» 1983 - கவிஞர் வகாப்
» 1984 - கவிஞர். நா. காமராசன்
» 1985 - கவிஞர் ஐ. உலகநாதன்
» 1986 - கவிஞர். மு. மேத்தா
» 1987 - கவிஞர் முடியரசன்
» 1988 - கவிஞர் பொன்னிவளவன்
» 1989 - கவிஞர் அப்துல் ரகுமான்
» 1990 - பாவேந்தர் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் 21 பேர் விருது பெற்றனர்.
» 1991 - பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு
தமிழக அரசின் பாவேந்தரர் பாரதிதாசன் விருது:
Reviewed by Bright Zoom
on
February 13, 2018
Rating:
No comments: