எல்லா விதமான வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கான முக்கிய நடப்பு நிழ்வுகளின் தாெகுப்பு:
தமிழகம்:
தமிழக அரசுக்கு மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருது :
உணவு தானிய உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகளை கவுரவிக்கும் வகையிலும், 2015-16-ம் ஆண்டில் உணவுதானிய உற்பத்தியில் உயரிய சாதனை படைத்து அகில இந்திய அளவில் சிறந்த மாநிலமாக விளங்கியதற்காகவும் தமிழக அரசு கிரிஷி கர்மான் விருது வழங்கப்பட்டுள்ளது.
2010-11-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 75.25 லட்சம் டன்னாக இருந்தது.
இது 2011-12-ம் ஆண்டில் 1.01 கோடி டன் என்ற அளவை எட்டியது.
இதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து கிரிஷி கர்மான் விருது கிடைத்தது.
இதேபோல், 2013-14-ம் ஆண்டில், 6.14 லட்சம் டன் பயறு வகை உற்பத்தி செய்ததற்காக இரண்டாம் முறையும், 2014-15-ம் ஆண்டில் 40.75லட்சம் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்ததற்காக மூன்றாம் முறையும் கிரிஷி கர்மான் விருதை தமிழக அரசு பெற்றது.
மகசூல் இடை வெளியை குறைத்து உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக, 2012-13-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உணவு தானிய இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் :
தேசிய அளவில் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு தேசிய அளவில் முதியவர்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவலில் இது தெரியவந்துள்ளது.
தமிழ்த்தாய்க்கு சிலை:
மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ்த்தாய்க்கு சிலைஅமைக்கப்படவிருக்கிறது
என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
ரூ.1000 மற்றும் ரூ.10 மதிப்பிலான காசுகள் வெளியிடு:
ஒடிஷாவிலுள்ள பூரி ஜகநாதர் கோவிலின் நூறாவது
”நவகலிம்பராதிருவிழா”
(nabakalebara festival) நினைவாக ரூ.1000 மற்றும் ரூ.10 மதிப்பிலான காசுகளை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார்.
கிஷன்கங்கா நீர் மின் திட்டம் :(Kishanganga Hydro Project)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் அமைந்துள்ள கிஷன்கங்கா நீர் மின் திட்டத்தின் (Kishanganga Hydro Project)
19-03-2018 அன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் மூலம் அமைக்கப்படும் மொத்தம் 340மெகாவாட் திறனுடைய இந்த திட்டத்தில்
110மெகாவாட் உற்பத்தி திறனுடைய முதல் அலகு தற்போது செயல்படத்
துவங்கியுள்ளது.
பெண்கள் அறிவியல் காங்கிரஸ்
(Women’s Science Congress)
ஏழாவது “பெண்கள் அறிவியல் காங்கிரஸ்” (Women’s Science Congress)
மணிப்பூர் மாநிலத்திலுள்ள இம்பால் பல்கலைக்கழகத்தில் 18-19 மார்ச் 2018 ஆகிய தினங்களில்,
105 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூடுகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
முதல் பெண்கள் அறிவியல் மாநாடு 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது,
”சக்ஷம் கல்வி உதவித் தொகை திட்டம்” (Saksham Scholarship Scheme) :
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு டிப்ளமோ,
பட்டபடிப்பு தொழில்நுட்ப படிப்பிற்கு வழங்கப்படும் இந்த கல்வி உதவித்தொகை 2014-2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கல்விக் கட்டணமாக ரூ.30000 மற்றும் இதர உதவித்தொகையாக ரூ.20000 மும் , வருடத்திற்கு1000
மாணவர்களுக்கு வழங்கப்படும்.
8வது சர்வதேச தியேட்டர் ஒலிம்பிக்ஸ் (International Theatre Olympics),
“நட்பின் கொடி” (Flag of friendship) எனும் நோக்கில், 17 பிப்ரவரி2018 முதல் 8 ஏப்ரல் 2018 வரையில்இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
பூட்டான்,கிரிபாதி, சாயோ டோம், பிரின்சிப் மற்றும் சாலமன் தீவுகள் (Bhutan Kiribati Sao Tome Principe Solomon Islands)
ஆகிய நாடுகளை மிகக்குறைந்த வளர்ச்சி கொண்ட நாடுகள் பிரிவிலிருந்து (Least developed countries)அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கு ஐக்கிய நாடுகளவையீன் வளர்ச்சி கொள்கைக்கான குழு பரிந்துரைத்துள்ளது.
போர் நினைவுச் சின்னம் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி (War Memorial Boys and Girls Hostel) டேராடூனில் தண்டா லகாண்ட் கிராமத்தில் உத்தராகண்ட் மாநில அரசினால் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் (2013-2017)ரஷியா முதலிடத்தைலும், அமெரிக்கா இரண்டாமிடத்திலும், இஸ்ரேல் மூன்றாமிடத்திலும், பிரான்ஸ் நான்காம் இடத்திலும் இருப்பதாக ஸ்டாக்கோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகிலேயே மிகப்பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் பயணிகள் தொலைக்கும் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிப்பதற்காக
”Lost and Found Mobile App”
எனப்படும் மொபைல் செயலியை மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்புப் படை
(Central Industrial Security Force (CISF))
அறிமுகப்படுத்தியுள்ளது.
‘கல்வித் துறையில் மனித மூலதனத்தை மாற்றியமைப்பதற்கான நிலையான செயல்திட்டம்
2018-2020 (Sustainable Action for Transforming Human Capital in Education (SATH-E)) 2018 மார்ச் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
நிதி ஆயோக்கின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த் இந்த செயல்திட்டத்தை வெளியிட்டார். ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம்,ஒடிசா ஆகிய மாநிலங்களின் பங்கேற்புடன் நிதி அயோக் இந்த திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.
டீசல் டோர் டெலிவரி மூலம் விற்பனை :இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், டோர் டெலிவரி மூலம், டீசலை வீட்டிற்கே கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை,விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் மாநாடு 19-20மார்ச் 2018 தேதிகளில் புது தில்லியில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ராபெர்டோ அஸீவேடோ, இந்திய வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ்பிரபு,
நேபாளம்,வங்காளதேசம் உள்ளிட்ட 7 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் பங்கேற்றனர்.
ஆப்ரிக்க நாடுகள் உள்பட 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சிகளின் வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
2010-வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யும் இந்த மசோதாவின் படி, கடந்த 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்சிகள் பெற்ற வெளிநாட்டு நன்கொடைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதில்லை .
அதாவது 2016 நிதிச் சட்டத்தில் இடம்பெற்றிருந்த "2010, செப்டம்பர் 26-இல் இருந்து' என்ற வார்த்தைகள் தற்போதைய திருத்த மசோதாவில் "1976, ஆகஸ்ட் 5-இல் இருந்து' கட்சிகளுக்கு விதிவிலக்கு என்று மாற்றப்பட்டுள்ளப்படவுள்ளது.
பிஜு பட்நாயக்கின் வீட்டை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராம்நாத் கோவிந்த் :
ஒடிஸா முன்னாள் முதல்வரும், மறைந்த அரசியல் தலைவருமான பிஜு பட்நாயக்கின் பூர்விக வீடான ஆனந்த பவனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
ஒடிஷா மாநிலத்தின் கட்டக் நகரில் உள்ள "ஆனந்த பவன்' என்று அழைக்கப்படும் பிஜு பட்நாயக்கின் வீடு,அருங்காட்சியகம் மற்றும் கல்வி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தில் உள்ள "அதிநாயக' என்ற வார்த்தையை நீக்க ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
"அதிநாயக'என்றால் சர்வாதிகாரி என்று பொருள். இந்தியாவில் சர்வாதிகாரம் இல்லை;ஜனநாயகம் மட்டுமே உள்ளது. எனவே, தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ள "அதிநாயக' என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரிபூன் போரா தனி நபர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில் அவர் ஜன கன மன எனத் தொடங்கும் தேசிய கீதத்தில் "சிந்து' என்ற இடத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இடம் தற்போது இந்தியாவில் இல்லை. ஆனால்,துரதிருஷ்டவசமாக, இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான வடகிழக்கு இந்தியா பற்றி தேசிய கீதத்தில் குறிப்பிடப்படவில்லை.
எனவே,தேசிய கீதத்தில் "சிந்து' என்ற வார்த்தைக்குப் பதிலாக,
"வடகிழக்கு இந்தியா'
என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும் என்று ரிபூன் போரா தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் மாநில பழமாக பலாப்பழம்அறிவிக்கப்படவுள்ளது.
அரசு பணிகளில் சேர்வோர் ஐந்தாண்டு ராணுவத்தில் பணியாற்றுவதை,கட்டாயமாக்க வேண்டும் என, பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
லிங்காயத்து சமூகத்தினரை, தனி மதப் பிரிவாக கர்நாடக அரசு அங்கீகரித்துள்ளது
கர்நாடகாவில் லிங்காயத்து சமூகத்தினர், 17சதவீதம்உள்ளனர்;லிங்காயத் சமூகத்தினர், 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, தத்துவ மேதையும்,கவிஞருமான, பசவண்ணர் மற்றும் அவரது தத்துவங்களை பின்பற்றுபவர்கள்.
லிங்காயத்துகள், தங்களை தனி மதத்தவராக அங்கீகரிக்கக் கோரி, நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
அவர்களது கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில்,நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, சமீபத்தில், மாநில அரசிடம் பரிந்துரைகளை அளித்தது.
கர்நாடக மாநில அரசு, அந்த கோரிக்கைகளை அங்கீகரித்து, அது தொடர்பான பரிந்துரை கடிதத்தை, மத்திய அரசுக்கு கர்நாடகா அரசு அனுப்பியுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
பேரிடர் அபாயக் குறைப்பு பற்றிய முதலாவது இந்தியா-ஜப்பான் பயிலரங்கம் (India-Japan Workshop on Disaster Risk Reduction )
19-03-2018அன்று புது தில்லியில் நடைபெற்றது.
வருணா ஒத்திகை:
”வருனா 2018” (VARUNA-18) என்ற பெயரில் இந்திய-பிரஞ்சு கடற்படைகளின் கூட்டு இராணுவப்பயிற்சி அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.
இந்திய கடற்படையும், பிரெஞ்ச் கடற்படையும்1993 மே மாதம் முதல் இருதரப்பு கடல்சார் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
2001 முதல்,இதுபோன்ற ஒத்திகைக்கு வருணா எனப் பெயரிடப்பட்டு இதுவரை
15 ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன.
கடைசியாக, 2017 ஏப்ரல் மாதம் பிரெஞ்ச் கடற்பகுதியில் வருணா ஒத்திகை நடைபெற்றது.
புது தில்லி - டெல் அவிவ் (இஸ்ரேல்) நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் மார்ச் 22 முதல்
துவங்குகிறது.
256 இருக்கைகளைக் கொண்ட போயிங் 787-800 ரக விமானங்கள் இந்தச் சேவைக்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.
சர்வதேச நிகழ்வுகள்:
உலகிலேயே அதிக செலவாகும் நகரம் (most expensive city)
சிங்கப்பூர் என”எக்கணாமிஸ்ட் இண்டலிஜன்ஸ் யுனிட்”
(Economist Intelligence Unit)
அமைப்பு வெளியிட்டுள்ள “உலக வாழ்க்கை செலவின அறிக்கை 2018”
(Worldwide Cost of living report 2018)யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இரண்டாவது மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே பாரிஸ்,சூரிச்(சுவிட்சர்லாந்து), ஹாங்காங்,ஓஸ்லோ(நார்வே) ஆகிய நகரங்கள் பெற்றுள்ளன.
இந்தியாவிலிருந்து புது தில்லி124 வது இடத்தையும்,
சென்னை 126 வது இடத்தையும்,
பெங்களூரு 129 வது இடத்தையும் பெற்றுள்ளன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (International Criminal court) 16-03-2018அன்று இந்தோனேசியா வெளியேறியுள்ளது.
ரஷிய அதிபர் தேர்தலில் விளாதிமீர் புதின் நான்காவது முறையாக வெறிபெற்றுள்ளார்.
ரஷிய வரலாற்றில் இல்லாத அளவுக்கு 76.66 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ரஷியாவை ஆண்டு வரும் புதினின் தலைமைப் பதவி,மேலும் 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை மனிதர்:
சீனாவின் 'ஏவுகணை மனிதர்' என்று அழைக்கப்படும் வெய் ஃபெங்கே (63) அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், சீன ராணுவத்தின் ஏவுகணைப் படைப் பிரிவு தளபதியாக பொறுப்பு வகித்தவர்.
சீன பிரதமராக லீ கெகியாங் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் அதிபராக ஷீ ஜின்பிங் பொறுப்பேற்று ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில் அவர் இந்த பதவிக்கு இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார்.
மொரிசீயஸ் அதிபர் அமீனா குரிப் பாகிம் ராஜினாமா :
நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மொரிசீயஸ் அதிபர் அமீனா குரிப் பாகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பெண் அதிபரான அமீனா குரிப் பாகிம், நாட்டு நலன் கருதி ராஜினமா செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
மொரிசீயஸின் முதல் பெண் அதிபரான அமீனா குரிப் பாகிம் (வயது 58) கடந்த 2015 ஆம் ஆண்டு அதிபர் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2வது முறையாக அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
”பிளாக் செயின்” (Black Chain)
”பிளாக் செயின்” (Black Chain)
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தும் முதல் நாடு எனும் பெருமையை“சியரா லியோன்”(Sierra Leone) பெற்றுள்ளது.
முக்கிய நியமனங்கள் :
வடகொரியா நாட்டிற்கான (Democratic People's Republic of Korea)
இந்தியாவின் தூதராக அதுல் எம். கோட்சர்வ் (Atul M Gotsurve)
நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுகள்:
நிடாஹஸ் கோப்பை - இந்தியா சாம்பியன் :
இலங்கையில் நடைபெற்ற இந்தியா, இலங்கை,வங்கதேச அணிகள் பங்கேற்ற, நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை4விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இன்டியன் வெல்ஸ் - டெல் போட்ரோ சாம்பியன் :
அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ, நடப்புச் சாம்பியனாக இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
அங்கிதா ரெய்னா சாம்பியன்:
ஐடிஎஃப் டென்னிஸ் -அங்கிதா சாம்பியன் : மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் வீராங்கனை அமான்டைன் ஹீசியை வீழ்த்தி இந்தியாவின் அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியன் சூப்பர் லீக் - சென்னை சாம்பியன் :
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி பெங்களூரு எஃப்சி அணியை வெற்றி பெற்று ஐஎஸ்எல் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது.
Bright Zoom
எல்லா விதமான வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கான முக்கிய நடப்பு நிழ்வுகளின் தாெகுப்பு:
Reviewed by Bright Zoom
on
March 21, 2018
Rating:
No comments: