உலக வரலாற்றில் இன்று(25-03-2018)

உலக வரலாற்றில் இன்று(25-03-2018)



வரலாற்றில் இன்று நடந்தது என்ன?

சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால்
பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல்தினம்..!


கடந்த 400 ஆண்டுகளுக்குள் 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு, அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்துள்ளனர். 

இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். 

இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும் மேலும் இனவெறி போன்ற ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

நார்மன் எர்னஸ்ட் போர்லாக்:


பசுமைப் புரட்சியின் தந்தை நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அமெரிக்காவின் கிரெஸ்கோ நகரில் பிறந்தார்.

இவர் மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளில், 20 ஆண்டுகளுக்குள் அதிக விளைச்சல் தரும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குட்டையான (Semi Dwarf ) கோதுமை பயிர் ரகங்களை உருவாக்கினார். 

இவற்றை மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தானிலும் அறிமுகம் செய்ய வழிகாட்டினார். கோதுமை ஏற்றுமதியில் 1963-ல் மெக்சிகோ முதலிடம் பெற்றது. 

உணவு பாதுகாப்பை மேம்படுத்திய இவரது செயல்பாடு பசுமைப் புரட்சி எனப் பாராட்டப்பட்டது. உணவு உற்பத்தியை பெருக்கி, உலக அமைதிக்கு வித்திட்டதற்காக 1970-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம், அதிபரின் ஃபிரீடம் பதக்கம், நோபல் பரிசு ஆகிய 3 உயர்ந்த விருதுகளை பெற்றார். இவர் இந்தியாவின் பத்ம விபூஷண் விருதும் பெற்றவர்.

உலகம் முழுவதும் பல கோடி மக்களை பசியின் பிடியில் இருந்து காப்பாற்றிய நார்மன் எர்னஸ்ட் போர்லாக் தனது 95-வது வயதில் (2009) மறைந்தார்.


அடால்ஃப் எங்லர்:


ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர், ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் கஸ்டவ் அடால்ஃப் எங்லர் 1844ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த ஸாகன் (தற்போது போலந்தில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.

இவருடைய தி நேச்சுரல் பிளான்ட் ஃபேமிலீஸ், தி பிளான்ட் கிங்டம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 1880 முதல் தன் வாழ்நாள் இறுதிவரை பொட்டானிக்கல் இயர்புக்ஸ் ஃபார் சிஸ்டமேடிக்ஸ் என்ற இதழை வெளியிட்டு வந்தார்.

1879-ல் இவர் பல்லுயிர் நில அமைப்பியல் (Geology on Biodiversity ) காரணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு உயிர் புவியியல் பகுதிகளையும் ( Regions Biogeorophical ) வரையறுத்தார்.

லெனினியன் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகளை பெற்றுள்ளார். தாவர வகைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு இவரது பெயரில் பதக்கம் வழங்கி வருகிறது.

தாவரவியல் உலகின் முன்னோடியாக கருதப்படும் அடால்ஃப் எங்லர் தனது 86வது வயதில் (1930) மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்...!

1857ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார். 


1954ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது.



 1584 – வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார்.

1634 – மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர்.
1655 – டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.


1807 – அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.


1821 – (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் ஆரம்பமானது.


1857 – பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.


1911 – நியூயோர்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர்.


1918 – பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யூகொஸ்லாவியா இணைந்தது.

1947 – இலினோயில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர்.

1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.

1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.


1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).

1957 – மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.

1965 – மனித உரிமைவாதி மார்ட்டின் லூதர் கிங் தனது 4-நாள் 50-மைல் எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

பிறப்புக்கள்:

1914 – நோர்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர், (இ. 2009)

இறப்புக்கள்:

2014 – தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)

சிறப்பு நாள்:

கிரேக்கம் – விடுதலை நாள்





உலக வரலாற்றில் இன்று(25-03-2018) உலக வரலாற்றில் இன்று(25-03-2018) Reviewed by Bright Zoom on March 25, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.