உலக வரலாற்றில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் - மார்ச் 29!
பவானி பிரசாத் மிஸ்ரா
இந்தி காவிய உலகின் முக்கிய படைப்பாளியான பவானி பிரசாத் மிஸ்ரா 1913ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் டிகரியா என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் பள்ளிக்கல்வியை முடிக்கும் முன்பே கவிதை எழுதத் தொடங்கிவிட்டார். பிரபல கவிஞர்களின் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. அதன்பின் இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தார். இவர் காந்தியடிகளின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திய கோட்பாடுகளின் அடிப்படையில் கல்வி வழங்கும் வகையில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்தினார்.
இவரது நூல்கள் மொத்தம் 22 வெளிவந்துள்ளன. சம்பூர்ண காந்தி, வாங்மய, கல்பனா உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தியின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவராக 1940-களில் புகழ்பெற்றார்.
இவரது புனீ ஹுயி ரஸ்ஸி படைப்புக்காக 1972-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பத்மஸ்ரீ, உத்தரப் பிரதேச இந்தி அமைப்பின் இலக்கிய விருது, மத்தியப் பிரதேச அரசின் ஷிகர் சம்மன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் இலக்கிய வட்டாரத்தில் பவானி பாய் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். மிக எளிமையான, நேரில் நின்று பேசுவதுபோலவே காவிய நடையைப் படைக்கும் ஆற்றல் கொண்ட பவானி பிரசாத் மிஸ்ரா தனது 71வது வயதில் (1985) மறைந்தார்.
சாமுவேல் வால்டன்
உலகப் புகழ்பெற்ற வால் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் வால்டன் 1918ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
இவர் ஓட்டப்பந்தய வீரராகவும் பிரகாசித்தார். 1942-ல் ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் பதவி வரை உயர்ந்தார். பின்னர் ஒரு பிரபல விற்பனை நிலையத்தின் விநியோக உரிமையை பெற்றார்.
இதுபோல பல யுக்திகளை செயல்படுத்தி வெற்றி கண்டார். செல்ஃப் சர்வீஸ் சேவையை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் கிளைகள் திறந்தார். அமெரிக்காவின் நம்பர் ஒன் அங்காடியாக அது வளர்ந்தது.
1998-ல் டைம்ஸ் பத்திரிகை 20-ம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க நபராக இவரை தேர்ந்தெடுத்தது. சிறந்த தொழிலதிபரான சாம் வால்டன் தனது 74வது வயதில் (1992) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்:
2004ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அயர்லாந்து, புகைப்பிடித்தலை பணியிடங்களில் தடை செய்த முதல் நாடானது.
2007ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நார்வே நாட்டின் ஏபெல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.
1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தான்.
1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.
1831 – துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.
1849 – பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
1867 – கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.
1879 – ஆங்கிலோ-சூலு போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.
1886 – ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.
1971 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.
1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
1974 – நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
2004 – பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
2004 – அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.
2005 – யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.
2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
பிறப்புக்கள்:
1790 – ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி (இ. 1862)
1918 – சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் (இ. 1992)
1927 – ஜோன் வேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2004)
1941 – ஜோசப் டெய்லர், இளையவர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
இறப்புக்கள்:
1909 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (பி. 1843)
1985 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (பி. 1897)
2000 – சி. கே. சரஸ்வதி, தமிழ்த் திரைப்பட நடிகை
சிறப்பு நாள்:
தாய்வான் – இளைஞர் நாள்

உலக வரலாற்றில் இன்று மார்ச் 29!
Reviewed by Bright Zoom
on
March 29, 2018
Rating:
No comments: