உலக வரலாற்றில் இன்று-(26.03.2018)



உலக வரலாற்றில் இன்று-(26.03.2018)




மஹாதேவி வர்மா :


இந்தி இலக்கியத்தில் முக்கியமானவரும், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவருமான மஹாதேவி வர்மா 1907ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் பிறந்தார்.

இவரது படைப்புகளில் சொந்த அனுபவங்களை உள்ளடக்கிய ஸ்ம்ருதி கீ ரேகாயே (Smiriti ki Rokhaye), அதீத் கே சல்சித்ர (Ateet ke Chalchitra) ஆகிய நினைவுச் சித்திரங்கள் மிகவும் பிரபலமானவை.

அடிமை இந்தியாவில் நிலவிய துன்பங்களைக் கண்டு வேதனை அடைந்து, அவற்றை தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். 

சமூகப் பிரச்சனைகள், பெண்களின் வாழ்க்கைத் தரம் குறித்த சிந்தனைகளை (Shrinihala ki kariyan) என்ற தொகுப்பில் எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தியின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளால் கவரப்பட்டு, சமூக சேவையிலும் ஈடுபட்டார். 

சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், ஞானபீட விருது மட்டுமின்றி, இலக்கியத்துக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்றுள்ளார்.

மார்டன் மீரா என்று போற்றப்பட்ட மஹாதேவி வர்மா தனது 80வது வயதில் (1987) மறைந்தார். 

ரிச்சர்ட் டாக்கின்ஸ்:


பரவலாக அறியப்பட்ட படிவளர்ச்சி உயிரியலாளர் கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்ஸ் 1941ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி கென்யாவில் உள்ள நைரோபியில் பிறந்தார்.

இவரது தி செல்ஃபிஷ் ஜீன் (   ) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக உதவியாக 2006ஆம் ஆண்டில் இவர் எழுதிய தி காட் டில்யூசன் என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. 

அதில் எப்படி உயிரியலில் மரபணு என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் மீம் என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்தியுள்ளார். 

இதனைத் தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு என்று கூறியுள்ளார். 

இன்று இவர் தனது 77வது வயதை நிறைவு செய்கிறார்.

முக்கிய நிகழ்வுகள்:

1199 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான்.

1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.

1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.

1812 – வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.

1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.

1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.


1874ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி கவிதை இலக்கியத்துக்கான புலிட்ஸர் விருதுகளை 4 முறை பெற்ற அமெரிக்க கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பிறந்தார்  


1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப்படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.

1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் முதற்தடவையாக பெண்கள் சிறைக்கைதிகளாயினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.



1953ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி ஜொனாஸ் சால்க் ( Jonas Salk ), தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.



1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

1971 – கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேசவிடுதலைப் போர் ஆரம்பமானது.

1979 – இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கைச்சாத்தானது.

1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள்கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.

1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும்வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

2000 – விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.

2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.

2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.



பிறப்புகள்:



1874 -இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)

1910 -க. வி. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (இ. 2002)

1913 -பால் ஏர்டோசு, அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (இ. 1996)

1926 -தா. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1992)

1933 -டின்டோ பிராஸ், இத்தாலிய இயக்குநர்

1940 -நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி

1941 -விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி, உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளர்

1941 -ரிச்சர்ட் டாக்கின்சு, கென்ய-ஆங்கிலேய உயிரியலாளர்

1953 -ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (இ. 2011)

1965 -பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்

1973 -லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்



இறப்புகள்:

1326 -அலெஸ்ஸாண்டிரா கிலியானி, இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி.1307)

1827 -லுடுவிக் ஃவான் பேத்தோவன், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1770)

1892 -வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1819)

1902 -செசில் ரோட்சு, ஆங்கிலேய-தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, கேப் குடியேற்றத்தின் 6வது பிரதமர் (பி. 1853)

1923 -சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (பி. 1844)

1977 -டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1910)

2006 -குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)

2013 -சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)

2015 -தோமசு திரான்சிட்ரோமர், நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (பி. 1931)


சிறப்பு நாள்:

வங்காளதேச விடுதலை நாள் (வங்காளதேசம், 1971)

மாவீரர் நாள் (மாலி)

Bright Zoom

உலக வரலாற்றில் இன்று-(26.03.2018) உலக வரலாற்றில் இன்று-(26.03.2018) Reviewed by Bright Zoom on March 26, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.