மனிதனின் உடலைப் பற்றி தெரிந்திடாத சில உண்மை தகவள்கள்...!

மனிதனின் உடலைப் பற்றி
தெரிந்திடாத சில உண்மை
தகவள்கள்...!



நம்முடைய உடலைப் பற்றி நமக்கு நிறையத் தெரியும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் உடலைப் பற்றி நமக்குத் தெரியாத விஷயங்களே அதிகம். அப்படிப்பட்ட சில விஷயங்களை பார்ப்போமா?


குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும்.குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும்.

 ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். 

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். 

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்,

 அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். 

அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து

 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி தான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.


மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. 

 மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.

மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400.

மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.

மனித மூளையின் எடை 1.4 கிலோ.

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்.

மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்.

உடலின் மெல்லிய சருமம் கண் இமை.

மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி.

ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.

நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர்.

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. 

இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும்.

 நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

 நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

 உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும்.

 வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.

நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. 

மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

 ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். 

தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பிகல்லீரல்தான். 

மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன்.

 ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.

நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். 

அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே.

 அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.



நாக்கு ரேகை

ஒன்று தெரியுமா, நமது கைரேகையை வைத்து மட்டுமல்ல, நாக்கை வைத்தும் நம்முடைய அடையாளத்தை நிரூபிக்க முடியுமாம். ஒவ்வொருவருடைய நாக்கில் உள்ள ரேகைகளும் தனித்தன்மை கொண்டவை. என்ன, அதை ஒப்பிட்டு வேறுபாடு கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் கஷ்டம்.

தும்மலின் வேகம்

நம்முடைய தும்மலின் வேகம் 160 கி.மீ. (ஒரு மணி நேரத்துக்கு).

20 முடிகள்

ஒரு சராசரி மனிதருக்கு 1 லட்சம் மயிர்க்கால்கள் இருக்கும். ஒரு மனிதரின் வாழ்நாளில் ஒரு மயிர்க்காலில் இருந்து 20 முடிகள் முளைக்கலாம்.

தோல் துணுக்கு

நம்முடைய தோல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 6 லட்சம் நுண்ணிய துணுக்குகளை இழந்துவிடுகிறது. நம்மைச் சுற்றியுள்ள தூசிக்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 700 கிராமை இப்படி மனிதர்கள் இழக்கிறார்கள். ஒரு மனிதர் 70 ஆண்டுகள் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால், இந்த எழுபது ஆண்டுகளில் 47 கிலோ தோல் கழிவை அவர் இழந்துவிடுவார்.

வயிற்று அமிலம்

நமது இரைப்பை ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை புதிய மேற்பூச்சைப் பெற்றுவிடும். ஒருவேளை மேற்பூச்சு பெறவில்லை என்றால், இரைப்பையில் உள்ள கடுமையான அமிலங்கள், நமது இரைப்பையையே அரித்துவிடும்.

50 ஆயிரம் நறுமணம்

நாயின் மூக்குதான் மோப்பம் பிடிப்பதிலேயே சிறந்தது அல்லவா? அதுபோலவே நம்முடைய மூளைக்கும் 50,000 வேறுபட்ட மணங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய திறன் உள்ளது.

எவ்வளவு நீளம்?

நம்முடைய சிறுகுடல் சராசரி மனிதனின் உயரத்தைப்போல நான்கு மடங்கு நீளமாக இருக்கும். 18 முதல் 23 அடி நீளம் கொண்ட அது, நம்முடைய வயிற்றுக்குள் பாம்பு போலச் சுருங்கிக் கிடக்கிறது.

மூன்று கோடி

இன்னொன்று தெரியுமா? நம்முடைய ஒவ்வொரு சதுர அங்குலத் தோலிலும் 3 கோடி பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. நல்லவேளையாக அவற்றில் பெரும்பாலானவை தீங்கு செய்யாதவை.

அரை லிட்டர்

நமது உடல் முழுக்க வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. இருந்தாலும், இரண்டு கால்களில் மட்டும் 5 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இவை இரண்டும் அரை லிட்டர் வியர்வையை ஒரு நாளில் சுரக்கின்றன.

ஒரு லட்சம் கி.மீ.

நமது உடலில் உள்ள நரம்புகளை ஒன்றாக இணைத்து நீட்டி வைத்தால், அது கிட்டத்தட்ட 1 லட்சம் கிலோ மீட்டர் நீளம் இருக்கும். உடலில் மிகக் கடுமையாக உழைக்கும் உறுப்பு இதயம்தான். ஒரு நாளில் ரத்தக் குழாய்களின் வழியாகப் பம்ப் செய்யும் ரத்தத்தின் மொத்த அளவு கிட்டத்தட்ட 7,500 லிட்டர்.

இரண்டு நீச்சல் குளம்

ஒரு மனிதருடைய வாய்க்குள் அவருடைய வாழ்நாள் முழுவதும் சராசரியாக 25,000 லிட்டர் எச்சில் சுரக்கிறது. இதைக்கொண்டு இரண்டு நீச்சல் குளங்களையே நிரப்பி விடலாமாம்.

கால்வாசி தலை

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் கால்வாசி பகுதி தலைதான் இருக்கும். அதேநேரம் வளர்ந்த பிறகு நமது உடலில் எட்டில் ஒரு பாகம்தான் தலை இருக்கிறது (ஒரு சாண்). அதனால், குழந்தைக்குத் தலை பெரிதாக இருப்பது போலத் தெரியலாம்.

11 நாள்

பல வாரங்களுக்குச் சாப்பிடாமல்கூட உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால், தொடர்ச்சியாக 11 நாட்களுக்கு மேல் தூங்காமல் வாழ முடியாது.






மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், 

கண்கள் 31 நிமிடங்கள் 
மூளை 10 நிமிடங்கள் 
 கால்கள் 4 மணி நேரம் 
தசைகள் 5 நாட்கள் 
 இதயம் சில நிமிடங்கள்

Bright Zoom
மனிதனின் உடலைப் பற்றி தெரிந்திடாத சில உண்மை தகவள்கள்...! மனிதனின் உடலைப் பற்றி தெரிந்திடாத சில உண்மை தகவள்கள்...! Reviewed by Bright Zoom on March 18, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.