மனித மூளை ஒரு அதிசயம் நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டு பிடிக்க‍ப்பட்ட‍ அறிவியல் உண்மை



மனித மூளை ஒரு  அதிசயம்  நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டு
பிடிக்க‍ப்பட்ட‍ 
அறிவியல் உண்மை



மனித மூளையின் அறிவியல் அதிசயம் 100 ஆண்டுகளுக்குப்பின் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍ உண்மை.

மூளை அமைப்பின் முக்கிய அம்சம்:
                  
100 வருடங்களுக்கு பின் வெளிக்கொண்டுவந்த நரம்பியல் நிபுணர் ஜேசன் யேட்மென் மூளைக்குள் நரம்பு இழை குவியலாக இருப்பதை தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார்.

இவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர், கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்டான்போர்டு(stanford) பல்கலைக்கழகத்தில் Ph.D பயின்று கொண்டிருக்கும் பாேது இதனை கண்டுபிடித்தார்.

மொழிகளை கண்டறிவதிலும், படிப்பதிலும் மூளையின் அமைப்பு எந்த விதத்தில் பங்களிக்கிறது என்பது குறித்து பயின்று வந்த யேட்மென், மூளைக்குள் நரம்பு இழை குவியலாக உள்ளது என்பது முக்கியமான ஒன்று என எண்ணினார். ஏனென்றால் அவரும் அவரது சக நண்பர்களும் நரம்பு இழைகள் குவியலாக இருப்பது குறித்து மருத்துவ அகராதியில் எங்கும் காணப்படவில்லை. எனவே இவர்கள் இது புதிய கண்டுபிடிப்பாக இருக்கும் என எண்ணினர்.

அனால் மருத்துவ துறையில் இருக்கும் வேறு சிலரிடம் இது குறித்து கேட்ட போது அவர்களுக்கும் இது புதிய தகவலக இருந்தது.

பின் அவர்கள் கண்டுபிடித்ததாக கூறிய நரம்பு இழை குவியல் பற்றி ஏற்கனவே பழைய மருத்துவ பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதையும் தெரிந்து கொண்டனர்.

மூளையை பற்றி பழமையான கூற்றுகள் மற்றும் கண்டு பிடிப்புகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், 100 ஆண்டு பழமையான அந்த மருத்துவ புத்தகத்தில் ஆழமாக தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்

அதில் ஜெர்மனியை சேர்ந்த நரம்பியல் நிபுணரான கார்ல் வெர்னிக்கே, நரம்பு இழை குவியல் குறித்து கண்டுபிடித்ததுடன், அதை 1881 ஆம் ஆண்டில் மூளை பற்றிய தனது வரைபடத்தில் வெர்ட்டி கல் ஆக்சிபிடல் பேசிகுலஸ் (Vertical Occipital Fasciculus) என்று பெயரிட்டுள்ளதை யேட்மென் கண்டுபிடித்தார்.

தான் கண்டுபிடித்ததை நூறு ஆண்டுகளுக்கு முன்பே மற்றொருவர் கண்டுபிடித்துவிடடார் என்று தெரிந்தவுடன் தனது ஆராய்ச்சியை யேட்மென் நிறுத்தியிருக்கலாம். 

ஆனால் மூளையின் அமைப்பு பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முக்கியமான கூற்று, தற்போ தைய மருத்துவ துறைகளில் ஏன் காணாமல் போனது என யேட்மென் சிந்தித்தார் பின்னர் இது குறித்து தனது ஆராய்ச்சி பணியை தொடங்கினர். 

எதனால் மூளை பற்றிய தகவல் காணாமல் போனது என்று துப்பறிய தொடங்கினார்.தொடர்ந்து சில வருடங்கள் ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள பழைய மருத்துவ நூல்களை ஆராய்ந்தார்.

 அப்போது மூளை பற்றிய வெர்னிக்கேவின் கண்டுபிடிப்பு , காணாமல் போனதற்கான அதிசயமான காரணத்தைக் கண்டுபிடித்தார்.

வெர்னிகேவுக்கு வழிகாட்டியாக இருந்த நரம்பியல் நிபுணர் 
தியோடர் மெய்னர்ட், தனது கூற்றில்மூளை யில் முன்பக்கமிருந்து பின் பக்கமாக நரம்பியல் பாதை கிடை மட்டமாக செல்லும் என்று கூறியிருந்தார்.

ஆனால் வெர்னிக்கே கண்டுபிடித்த நரம்பு இழை கூட்ட மானது செங்குத்தாக சென்றது.

 மெய்னர்ட் கூற்றை அப்போது இருந்த மருத்துவ விஞ்ஞானிகள் பொதுவாக நம்பியதால் அதற்கு முரணாக வெர்னிக்கேவின் கண்டுபிடிப்பு இருந்தது.

 எனவே அதை ஏற்றுக்கொள்ள அவ ர்கள் மறுத்துள்ளனர்.

ஆனால், வெர்ட்டிகல் ஆக்சிபிடல் பேசிகுலஸ் 
(Vertical Occipital Fasciculus)

 என்ற மூளை யின் அமைப்பு மிக முக்கி யமானது என்று யேட்மேன் தற்போது  உண்மைபடுத்தினார்.

நண்பரின் முகத்தை கண்டறிவதிலும், வார்த்தைகளை படித்து அதை மூளையின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கும் இந்த அமைப்பு மிகவும் முக்கியம் என்பதை யேட்மென் தற்போது உண்மைபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பு 100 ஆண்டு
களுக்கு பின் உண்மைதான் என்று நிரூபிக்கப்பட்டது.

Bright Zoom
மனித மூளை ஒரு அதிசயம் நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டு பிடிக்க‍ப்பட்ட‍ அறிவியல் உண்மை  மனித மூளை ஒரு  அதிசயம்  நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டு பிடிக்க‍ப்பட்ட‍  அறிவியல் உண்மை Reviewed by Bright Zoom on March 22, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.