இரயில்வே தேர்வு பொது அறிவு
உயிரியல் - தாவர புற அமைப்பியல்
உயிரிகளின் பண்புகள் :
உயிரணுக்களால் உருவாக்கப்படும் உயிரிகள் உயிருள்ளவை எனப்படும்.
எ.கா. தாவரங்கள், விலங்குகள்
உயிரணுக்கள் அற்ற திடப்பொருள்களால் ஆனவை உயிரற்றவை எனப்படும்.
எ.கா. கற்பாறை, புத்தகம்.
உயிருள்ளவற்றில் தாவரங்கள், விலங்குகள் அடங்கும்.
உயிருள்ளவை பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது.
ஆனால், உயிரற்றவற்றிற்கு இப்பண்புகள் கிடையாது.
அனைத்து உயிருள்ளவற்றிற்கும் உணவு தேவை.
அனைத்து உயிருள்ளவையும்
வாழ உணவு தேவை.
செல்களால் ஆனவை.
சுவாசம் மூலம் உணவை
ஆற்றலாக மாற்றுகின்றன.
தன் வாழ்க்கையின் சில
பருவம் வரை வளர்ச்சி அடைகின்றன.
புறத்தூண்டலுக்கு ஏற்பத்
துலங்கல்களை ஏற்படுத்துகின்றன.
குறிப்பிட்ட காலம் வரை உயிர்வாழ்கின்றன.
இனப்பெருக்கம் செய்கின்றன.
வாழிடம்
தாவரங்களின் பல்வேறு வாழிடங்கள் :
நாம் வாழும் வாழ்வியல் சூழலில் பல்வேறு வகையான தாவரங்களைக் காண்கிறோம்.
அனைத்துத் தாவரங்களும் தன் வாழிடத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைப்புச் செய்து கொள்கின்றன.
இயற்கையில் தாவரங்கள் நீர், நிலம், பாலைவனம், மலைப்பிரதேசம் போன்ற பல்வேறு வாழிடங்களில் வாழ்கின்றன.
வார்மிங் (1909) என்ற தாவரவியல் அறிஞர் தாவரங்களை, நீர்த்தேவையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரித்தார்.
அவையாவன.
நீர்வாழ்த் தாவரங்கள்
இடைநிலத் தாவரங்கள்
வறண்டநிலத் தாவரங்கள்
நீர்வாழ்த் தாவரங்கள் :
அதிக நீர் உள்ள பகுதிகளான குளம், குட்டை, ஏரி, ஆறு, கடல் போன்ற வாழிடங்களில் வாழும் தாவரங்கள் நீர்வாழ்த் தாவரங்கள் எனப்படுகின்றன.
இவை மூவகைப்படும்.
தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்கள் :
இத்தாவரங்கள் நீர்ப்பரப்பின்மீது தனித்து மிதக்கின்றன.
எ.கா.ஆகாயத் தாமரை
வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்கள் :
இந்த நீர்வாழ்த் தாவரங்கள் குளத்தின் அடிப்புற மண்ணில் வேரூன்றி இருந்தாலும் அவற்றின் இலைகள், நீர்ப்பரப்பின் மீது மிதக்கின்றன.
எ.கா. அல்லி, தாமரை.
மூழ்கிய நீர்வாழ்த் தாவரங்கள் :
இத்தாவரங்கள் முழுவதும் நீரில் மூழ்கி, மண்ணில் வேரூன்றி உள்ளன.
எ.கா. வாலிஸ்னேரியா.
நீர்வாழ்த் தாவரங்களின் தகஅமைவுகள் :
வேர்த்தொகுப்பு குன்றிய வளர்ச்சி உடையது.
சில தாவரங்களில் வேர்கள் முழுவதுமாகக் காணப்படுவதில்லை.
நீரில் மிதப்பதற்கு ஏற்றவாறு தண்டு தடித்த, குட்டையான, பஞ்சு போன்ற காற்றறைகளைக் கொண்டிருக்கும்.
நீரில் இலைகள் அழுகாதவாறு பாதுகாக்கப்படுவதற்கென இலைகளின் மேற்பரப்பில் மெழுகுப் பூச்சு காணப்படும்.
தாவரத்தின் பாகங்கள்
பொதுவாக எல்லாப் பூக்கும் தாவரங்களிலும் இரு முக்கியத் தொகுப்புகள் உள்ளன.
தரைக்குக் கீழ் உள்ள தொகுப்பு, வேர்த்தொகுப்பு எனவும், தரைக்கு மேல் உள்ள தொகுப்பு, தண்டுத் தொகுப்பு எனவும் இரு வகைப்படும்.
வேர்த்தொகுப்பில் பிரதான வேரும், பல பக்க வேர்களும் உள்ளன. தண்டுத் தொகுப்பில், தண்டு, கிளைகள் இலைகள் ஆகியன உள்ளன.
குறிப்பிட்ட பருவம் வந்தவுடன் பூக்கும்தாவரம் மலர்கள், கனிகள், விதைகளை உருவாக்குகின்றன.
வேர், தண்டு, இலைகள் தாவரத்தின் உடல் உறுப்புகள் எனப்படும்.
இவை இனப்பெருக்கத்தில் பங்கு கொள்வதில்லை. மலர்கள், கனிகள், விதைகள் இனப்பெருக்க உறுப்புகள் எனப்படும்.
இவை பொதுவாக இனப்பெருக்கத்தில் பங்கு கொள்கின்றன.
வேர்த்தொகுப்பு :
தரைக்குக் கீழே வளரும் தாவர உறுப்பு வேர்த்தொகுப்பு எனப்படும். கருவின் முளைவேரிலிருந்து இவை தோன்றுகின்றன. இது தாவரத்தின்கீழ் நோக்கி வளரும் பகுதி ஆகும்.
சூரிய ஒளிக்கு எதிர்த்திசையில் வளரக் கூடியது. பச்சையம் அற்றது. கணு மற்றும் கணுவிடைப்பகுதி அற்றது.
இவற்றில் இலைகள், மொட்டுகள் கிடையாது.
இரு வகையான வேர்த்தொகுப்புகள் உள்ளன.
ஆணிவேர்த்தொகுப்பு,
வேற்றிடவேர்த்தொகுப்பு
ஆணிவேர்த்தொகுப்பு :
இது கருவின் முளைவேரிலிருந்து தோன்றி அதிக ஆழம் வரை சென்று முதன்மை வேர் அல்லது ஆணிவேராக வளர்கிறது.
இது இரண்டாம்நிலை வேர்கள், மூன்றாம்நிலை வேர்கள் என்ற பக்கவாட்டு வேர்களை உருவாக்குகிறது.
பெரும்பான்மையான இருவித்திலைத் தாவரங்களில் ஆணிவேர்த்தொகுப்பு காணப்படும்.
எ.கா. மா, வேம்பு, கேரட், முள்ளங்கி.
வேற்றிடவேர்த்தொகுப்பு :
முளைவேர் தவிரத் தாவரத்தின் வேறெந்தப் பகுதியிலிருந்தும் வளரும் வேர் வேற்றிடவேர் எனப்படும்.
மெல்லிய ஒரே அளவிலான கொத்தாக வேற்றிடவேர் தோன்றுகின்றன.
இவ்வேர்கள் கொத்தாக நார்கள் போன்று தோற்றமளிப்பதால் இவற்றைச் சல்லிவெர்த்தொகுப்பு எனவும் அழைக்கலாம்.
பெரும்பாலும் ஒருவித்திலைத் தாவரங்களில் இவ்வேர்த்தொகுப்புக் காணப்படுகிறது.
வேரின் இயல்பான பணிகள் :
வேர் மண்ணிலிருந்து நீரையும் கனிம உப்புகளையும் உறிஞ்சுகிறது. இவற்றைத் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்தச் செய்கிறது.
தண்டுத்தொகுப்பு :
தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள தொகுப்பு தண்டுத்தொகுப்பு எனப்படும்.
கருவின் முளைக்குருத்திலிருந்து தண்டுவளர்கிறது. தண்டு, தாவரத்தின் மைய அச்சாகும்.
சூரியஒளியை நோக்கி வளரும். தண்டுத்தொகுப்பில் மையத் தண்டு, கிளை, கணு, கணுவிடைப் பகுதி, இலை, மொட்டு, மலர், கனி காணப்படுகின்றன.
இளம் தண்டு பசுமையாகவும், முதிர்ந்த தண்டு பழுப்பு நிறமாகவும் இருக்கும்.
தண்டிலிருந்து இலை தோன்றுகின்ற பகுதி கணு எனப்படும்.
இரண்டு அடுத்தடுத்த கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் கணுவிடைப் பகுதி எனப்படும்.
தண்டின் நுனியிலோ இலைக்கோணத்திலோ மொட்டுகள் காணப்படும்.
தண்டின் இயல்பான பணிகள்
தாங்குதல்:
கிளை, இலை மலர், கனி இவற்றைத் தாங்குகிறது.
கடத்துதல்:
நீரையும், கனிமங்களையும் வேரிலிருந்து தரைக்குமேல் உள்ள பாகங்களுக்கும், உணவுப் பொருள்களை இலையிலிருந்து தாவரத்தின் பிற பாகங்களுக்கும் கடத்துகின்றன.
தாவர புற அமைப்பியல்
இடைநிலத் தாவரங்கள் :
மிதமான நீர் உள்ள இடங்களில் வாழும் தாவரங்கள் இடைநிலத் தாவரங்கள் எனப்படும்.
அதிக நீரோ மிகக் குறைந்த நீரோ உள்ள இடங்களில் இத்தாவரங்களால் வளர இயலாது.
பெரும்பாலான பயிர்த் தாவரங்கள் இடைநிலத் தாவரங்கள் ஆகும்.
எ.கா. கோதுமை, மக்காச்சோளம், சூரியகாந்தி, மா, வேம்பு.
இடைநிலத் தாவரங்களின் தகவமைவுகள் :
நன்கு வளர்ச்சி அடைந்த வேர்த் தொகுப்பு.
இலைகள் பெரும்பாலும் பெரியவை மற்றும் அகலமானவை.
வறண்ட நிலத் தாவரங்கள். வறண்ட நிலப்பகுதியில் வாழும் தாவரங்கள் வறண்ட நிலத் தாவரங்கள் எனப்படும்.
இத்தாவரங்கள் நீர்ப் பற்றாக்குறை, அதிக வெப்பநிலை, வேகமான காற்று போன்ற சூழ்நிலைகளைத் தாங்கும் திறனைப் பெற்று வளரும் தன்மையைக் கொண்டவை.
எ.கா. சப்பாத்திக் கள்ளி.
வறண்ட நிலத் தாவரங்களின் தகவமைவுகள் :
நன்கு வளர்ச்சி அடைந்த வேர்த்தொகுப்பு மண்ணில் அதிக ஆழத்திலிருந்து நீரை உறிஞ்சப் பயன்படுகிறது.
சப்பாத்திக் கள்ளியின் தண்டு தடிமனாக தட்டையாகப் பசுமையாக உள்ளது.
இதன் மூலம் ஒளிச்சேர்க்கை செய்கிறது.
அதிகப்படியான நீரிழப்பைத் தடுக்க இலைகள் மிகவும் குறுகியும் முட்களாக மாற்றுரு அடைந்தும் காணப்படும்.
சிறு செடிகள், புதர்ச் செடிகள், மரங்கள் :
தண்டின் அளவு மற்றும் அமைப்பின் அடிப்படையில் பூக்கும் தாவரங்கள் மூவகைப்படும். அவையாவன
சிறு செடிகள், புதர்ச் செடிகள், மரங்கள்
சிறு செடிகள் :
மென்மையான தண்டு உடைய பசுமையான சிறிய தாவரங்கள் சிறு செடிகள் எனப்படும்.
தண்டு கட்டைத் தன்மையற்று, ஒரு மீட்டர் உயரத்திற்குள் தான் வளர்ச்சியடையும்.
எ.கா. முள்ளங்கி, கோதுமை, நெல், சூரியகாந்தி
புதர்ச் செடிகள்:
மெலிந்த ஆனால் கடினமான, கட்டைத் தண்டுடைய நடுத்தர அளவுள்ள தாவரங்கள் புதர்ச் செடிகள் எனப்படும்.
தெளிவான மையத்தண்டு அற்றது.
தோற்றத்தில் பல கிளைகளை உடையது.
எ.கா. ரோஜா, மல்லிகை, குரோட்டன்ஸ், துளசி, எலுமிச்சை
மரங்கள் :
உயரமான, பெரிய அளவான, தெளிவான கடினமான, கட்டையான தண்டு உடைய தாவரங்கள் மரங்கள் எனப்படும்.
கிளைகள் மற்றும் இலைகளை உருவாக்கும் மையத்தண்டு அடிமரம் எனப்படும்.
எ.கா. வேம்பு, மா, தேக்கு, தென்னை, ஆலமரம்

இரயில்வே தேர்வு பொது அறிவு உயிரியல் - தாவர புற அமைப்பியல்
Reviewed by Bright Zoom
on
March 24, 2018
Rating:
No comments: