ஐ.ஐ.எஸ்.டி.(IIST-2018) நுழைவுத்தேர்வு


 ஐ.ஐ.எஸ்.டி.(IIST-2018) நுழைவுத்தேர்வு



திருவனந்தபுரம்: 

திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 17ம் தேதி நடைபெறுகிறது.

ஐ.ஐ.எஸ்.டி.,

Indian Institute of Space Science and Technology (IIST)

விண்வெளி அறிவியல் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கான சிறந்த கல்வி நிறுவனம், ‘ஐ.ஐ.எஸ்.டி.,’ எனும்  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி!

இந்திய விண்வெளி துறையின் கீழ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தன்னாட்சி கல்வி நிறுவனமாக ஐ.ஐ.எஸ்.டி., செயல்பட்டு வருகிறது. 

சிறந்த உள்கட்டமைப்பு வசதி, தரமான பாடத்திட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவியல் ஆராய்ச்சி துறைகளில் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள், தொழில்நுட்ப ஆய்வக வசதிகள், சிறந்த சுற்றுச்சூழல் ஆகிய சிறப்பம்சங்களை இக்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.

இளநிலை படிப்புகள் (4 ஆண்டுகள்)
பிடெக்., - ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ஏவியோனிக்ஸ்

5 ஆண்டுகள் இரட்டை பட்டப்படிப்பு 

(பி.டெக். -எம்.எஸ்.,/எம்.டெக்.,): பி.டெக்., -இன்ஜினியரிங் பிசிக்ஸ் மற்றும் எம்.எஸ்., ஆஸ்ட்ரோனமி அன்ட் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், சாலிட் ஸ்டேட் பிசிக்ஸ் அல்லது எம்.டெக்., -எர்த் சிஸ்டம் சயின்ஸ் மற்றும் ஆப்டிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதிகள் 

இயற்பியல்,

 வேதியியல், 

கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக படித்து, 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சேர்க்கை முறை: ஜே.இ.இ., தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்களைக்க்கொண்டு தயாரிக்கப்படும் ‘ரேங்கிங்’ அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

முதுநிலை படிப்புகள் (எம்.டெக்.,)

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை- தெர்மல் அண்ட் புரோபல்சன், ஏரோ டைனமிக் அண்ட் பிளைட் மெக்கானிக், ஸ்டக்சர்ஸ் அண்ட் டிசைன்.

ஏவியோனிக்ஸ் துறை -  ஆர்.எப்., அண்ட் மைக்ரோவேவ் இன்ஜினியரிங், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், வி.எல்.எஸ்.ஐ., அண்ட் மைக்ரோசிஸ்டம்ஸ், கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ்.

கணிதத் துறை - மெஷின் லேர்னிங் அண்ட் கம்பியூடிங்

வேதியியல் துறை - மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி

இயற்பியல் துறை - ஆப்டிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சாலிட் ஸ்டேட் டெக்னாலஜி

எர்த் அன்ட் ஸ்பேஸ் சயின்சஸ் துறை-  எர்த் சிஸ்டம் சயின்ஸ், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஆஸ்ட்ரோனமி அன்ட் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் உள்ளிட்ட பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதிகள்: 

32 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பி.இ., / பி.டெக்., / பி.எஸ்., எம்.எஸ்சி., எம்.எஸ்., போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ‘கேட்’ / ’ஜெஸ்ட்’ /’நெட்’ போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.

சேர்க்கை முறை: 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.

ஆராய்ச்சி படிப்புகள்:

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியோனிக்ஸ், எர்த் அண்ட் ஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகிறது.

வயது வரம்பு: 

35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகையும் உண்டு.

தகுதிகள்: 

முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி, ‘கேட்’/ ’ஜெஸ்ட்’ / ’நெட்’ போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.


முக்கிய நாட்கள்:

அட்மிஷன் ப்ரச்சர் வெளியீடு: 02.05.2018

ஆன்லைன் பதிவு ஆரம்பம்: 22.05.2018

ஆன்லைன் பதிவு முடிவு: 10.06.2018

விபரங்களுக்கு: www.iist.ac.in

இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும்.

Bright Zoom

ஐ.ஐ.எஸ்.டி.(IIST-2018) நுழைவுத்தேர்வு   ஐ.ஐ.எஸ்.டி.(IIST-2018) நுழைவுத்தேர்வு Reviewed by Bright Zoom on March 08, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.