உலக வரலாற்றில் இன்று(02-04-2018)
இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்:
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும்.
இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரணையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச சிறுவர் புத்தக தினம்
வாசிப்பை நேசிப்போம்!
சர்வதேச சிறுவர் புத்தக தினம்!!
சர்வதேச சிறுவர் புத்தக தினம் 1967ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
வாழ்நாள் முழுவதும் சிறுவர்களுக்காக கதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவரின் பிறந்த நாளும் (ஏப்ரல் 2, 1805) இந்நாளில் நினைவு கூறப்படுகிறது.
மேலும், புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் போன்ற நோக்கத்திற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
வ.வே.சுப்பிரமணிய ஐயர்:
சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி, வரகனேரியில் பிறந்தார்.
இவர் 1907ல் லண்டன் சென்றபோது, சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம், அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
இவர் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.
இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், 'கம்பராமாயணம் - எ ஸ்டடி", மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழ் நவீன சிறுகதை தந்தை என்று போற்றப்படும் இவர் தன்னுடைய 44வது (1925) வயதில் மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்:
804 – போர்த்துக்கலில் அப்பல்லோ என்ற கப்பல் மூழ்கியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.
1902 – ரஷ்ய பேரரசின் உள்நாட்டமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1930 – ஹைலி செலசி எதியோப்பியாவின் மன்னராக முடி சூடினார்.
1972 – நடிகர் சார்லி சப்ளின்
1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.
1975 – வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
1975 – கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.
1982 – போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனா முற்றுகையிட்டது.
1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984 – ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2007 – சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2007 – ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்:
742 – சார்லமேன், பிரெஞ்சு அரசன் (இ. 814)
1618 – பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி, இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1663)
1725 – கியாகோமோ காசநோவா, இத்தாலிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1798)
1788 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனியக் கவிஞர் (இ. 1862)
1805 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், டென்மார்க்கு கவிஞர் (இ. 1875)
1875 – வில்லியம் டோன், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1942)
1881 – வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
1891 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட், செருமனிய ஓவியர், கவிஞர் (இ. 1976)
1942 – ரோஷன் சேத், இந்திய-ஆங்கில நடிகர்
1969 – அஜய் தேவ்கான், இந்திய நடிகர்
1977 – மைக்கல் பாஸ்பெந்தர், ஐரிய-செருமானிய நடிகர்
1981 – மைக்கல் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
1982 – டேவிட் ஃபெரர், எசுப்பானிய டென்னிசு வீரர்
1984 – ஷாவ்ன் ரோபர்ட்ஸ், கனடிய நடிகர்
இறப்புகள்:
1672 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய மதப்பரப்புனர், பினிதர் (பி. 1654)
1872 – சாமுவெல் மோர்சு, மோர்ஸ் தந்திக்குறிப்பு கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1791)
1933 – கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி, இந்தியத் துடுப்பாளர் (பி. 1872)
2005 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (பி. 1920)
2006 – பி. வி. பார்த்தசாரதி, குமுதம் இதழ் நிறுவனர்
2012 – எம். சரோஜா, நகைச்சுவை நடிகை
சிறப்பு நாள்:
சர்வதேச சிறுவர் புத்தக தினம்.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.

Reviewed by Bright Zoom
on
April 02, 2018
Rating:
No comments: