உலக வரலாற்றில் இன்று :(12-04-2018)
சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்!!
மனிதனின் விண்வெளி பயணத்திற்கான சர்வதேச தினத்தை உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இத்தினம் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி, ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளி பயணத்தை நினைவுக்கூறுவதற்காக தான்.
ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961ஆம் ஏப்ரல் 12ஆம் தேதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்
உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோர சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் தினமாக வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் ) ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிது.
இத்தினம் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உள்ள வீதியோர சிறுவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய இராஜ்ஜியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இத்தினத்தை கடைபிடிக்கின்றனர்.
டாம் கிளான்ஸி
உலகப் புகழ்பெற்ற உளவுத்துறை சார்ந்த நூல்களை படைத்த டாம் கிளான்ஸி 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலம் பால்ட்டிமோரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தாமஸ் லியோ கிளான்ஸி.
இவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால், பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அதை பற்றிய பல புத்தகங்களை படித்தார். ஓய்வு நேரங்களில் நாவல்கள் எழுதினார். இவரது 'தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்" என்ற நாவல் 1982ல் வெளியானது. முதல் நாவலே விற்பனையில் சாதனை படைத்தது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாசகர்களை கொண்டு சாதனை படைத்த படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி தனது 66வது வயதில் (2013) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார்.
1606ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1831 – உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
1899 – ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.
1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
1955ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
1955 – ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
1965 – ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.
1970 – அப்போலோ 13 ஏவப்பட்டது.
1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
1981 – தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
1987 – இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.
2002 – வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.
2007 – அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
2012 – இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
பிறப்புகள்
1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)
1910 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958)
இறப்புகள்
1918 – ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் (பி. 1841)

உலக வரலாற்றில் இன்று :(12-04-2018) சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்!!
Reviewed by Bright Zoom
on
April 13, 2018
Rating:

No comments: