வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)
ஜப்பானின் தாக்குதலிலிருந்து  இந்தியாவை காக்க  விரும்பிய காந்தியடிகள், உடனடியாக  ஆங்கிலேயர்களை  இந்தியாவை  விட்டு வெளியேற்றினால் மட்டுமே தாக்குதலைத் தடுக்க முடியும் என்று எண்ணினார்.
எனவே, வெளிப்படையான, வன்முறை அற்ற புரட்சி செய்தே தீரவேண்டும் என்று காந்தி முடிவெடுத்தார். இது குறித்து வார்தா தீர்மானம் ஜூலை 14, 1942-ல் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 8, 1942 -ல் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் கூடத்தில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய் அல்லது செத்து மடி  என்று தன் உரையில் காந்தி குறிப்பிட்டார். ஆகஸ்ட் 8 இரவில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
காந்தியடிகள் பூனாவில் ஆகாகான் மாளிகையில் காவல் வைக்கப்பட்டார்.
நாடெங்கிலும்  வெள்ளையனே வெளியேறு இயக்கம்  தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டது.  செய் அல்லது செத்து மடி, இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை, வெள்ளையனே வெளியேறு, ஜெயஹிந்த் ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எனினும் இப்புரட்சி நவம்பர்  1942 - க்குள் ஆங்கிலேய அரசால் அடக்கப்பட்டு விட்டது.
இப்புரட்சி ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
Bright Zoom.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) Reviewed by Bright Zoom on August 13, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.