சூரிய குடும்பம்

சூரிய குடும்பம்
கோள்
சூரியனை சுழன்றவாறு சுற்றி வரும் காலம்
சூரியனிடமிருந்து தொலைவு
கோளின் தற்சுழற்சி காலம்
புதன்
87.97 நாட்கள்
5.79 கோடி கி.மீ
58.6 நாள்கள்
வெள்ளி
224.7 நாள்கள்
10.82 கோடி கி.மீ.
243 நாள்கள்
பூமி
365 1/4 நாள்கள்
15 கோடி கி.மீ.
23 மணி 56 நிமிடங்கள்
செவ்வாய்
687 நாட்கள்
22.79 கோடி கி.மீ.
24 மணி 37 நிமிடங்கள்
வியாழன்
11 ஆண்டுகள் 10 மாதங்கள்
77.83 கோடி கி.மீ.
9 மணி 55 நிமிடங்கள்
சனி
29 ஆண்டுகள் 5 மாதங்கள்
142.7 கோடி கி.மீ.
10 மணி 40 நிமிடங்கள்
யுரேனஸ்
84 ஆண்டுகள்
287.1 கோடி கி.மீ.
17மணி 14 நிமிடங்கள்
நெப்டியூன்
164 ஆண்டுகள் 9 மாதங்கள்
449.7 கோடி கி.மீ.
16 மணி
வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகின்றன. மற்ற அணைத்து கோள்களும் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகின்றன.
கோள்களை  சுற்றும் துணைக்கோள்கள்

கோள்
கோள்களை சுற்றும் துணைக்கோள்கள்

புதன்
0
வெள்ளி
0
பூமி
1
செவ்வாய்
2
வியாழன்
63
சனி
60
யுரேனஸ்
27
நெப்டியூன்
13
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
ஆனால் யுரேனஸ் மற்றும் நெப்டியூனைதொலைநோக்கியால் மட்டுமே காண முடியும்.
புதன்,  வெள்ளி ஆகிய கோள்கள்  சூரிய உதயத்திற்கு  சற்று முன்பும் மாலையில் மறைந்தபின்பும் புலப்படும்.
வெள்ளியை விடிவெள்ளி என்றும் அழைக்கின்றனர்.
செவ்வாய் கோளுக்கும் வியாழனுக்கும் இடையில் இலட்சக்கணக்கான குறுங்கோள்கள் உள்ளன. சிறு சிறு கற்கள், பெரும்  பாறை முதல் 300 – 400 கி.மீ விட்டம் உடைய பெரும் வான்பொருள்கள் ஆகியவற்றின் தொகுதியே   குறுங்கோள்கள் .
இந்தியாவின் வானவியல் அறிஞர்வைணுபாப்பு, அணுசக்தி துரையின் தந்தை சாராபாய், கணிதமேதைஇராமானுஜம்  ஆகியோரின் பெயர்களில் குறுங்கோள்கள் உள்ளன.
சந்திரன் பூமியை சராசரி 3,84,401கி.மீதொலைவில் பூமியை சுற்றி வருகிறது.
சந்திரன், பூமியை சுற்றிவர ஏறத்தாழ27.3 நாள்கள் எடுத்து கொள்கிறது.சந்திரன் தன்னை தானே சுற்றிக்கொள்ள ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்து கொள்கிறது. எனவே, பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே தெரிகிறது.
சந்திரனின் மறுபக்கத்தை லூனா 3என்ற செயற்கைக்கோள் 1959 ல் முதன்முதலில் புகைப்படம் எடுத்தது.
சந்திரனில் வளிமண்டலம் இல்லை.
விண்கற்கள் சந்திரனில் மோதி மோதி ஏற்பட்ட கிண்ண குழிகள் உள்ளன.
வால்நட்சத்திரம் என்பது ஒரு விண்மீன் அல்ல. பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறை தான்வால்நட்சத்திரம்.
சூரியனுக்கு அருகே அது வரும்போது  பனி உருகி ஆவியாதலாலும், சூரியஒளி பிரதிபலிப்பதாலும்  வால்போல் நீண்டு தோன்றுகிறது.
வால்நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்திசையில் அமையும்.
பூமியின் வளிமண்டலத்துக்குள் வால்நட்சத்திர துகள்கள் அல்லது சிறிய பாறைகள் வெகுவேகமாக ஊடுருவும்போது வளிமண்டலத்தோடு உராய்வதால் ஏற்படும் காட்சி தான்எரிநட்சத்திரம்.
பல கோடிக்கணக்கான  விண்மீன்களின் தொகுதியே அண்டம்எனப்படும்.
 பல கோடிக்கணக்கான  அண்டங்களின் தொகுதியே பேரண்டம் எனப்படும்.
சில நாள்களில் தெளிந்த இரவுவானில் வெண்மை நிறத்தில் ஒளிரும் பட்டை போன்ற பகுதி புலப்படும் . இதனை நம்  முன்னோர்கள் ‘பால்வெளி' எனவும் ‘ஆகாய கங்கை' எனவும் அழைத்தனர்.சூரியன் உட்பட, கண்களுக்கு புலப்படும் விண்மீன்கள் எல்லாம் பால்வெளி அண்டத்தை சார்ந்தவை.
 Bright Zoom

சூரிய குடும்பம் சூரிய குடும்பம் Reviewed by Bright Zoom on August 13, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.