உலக வரலாற்றில் இன்று 06-09-2018 World history today

உலக வரலாற்றில் இன்று 06-09-2018
World history today

வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - செப்டம்பர் 06 !!

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !


வரலாற்றில் இன்று 06.09.2018

September 6, 2018

செப்டம்பர் 6 (September 6)


"ஜான் டால்டன்


 அணுக்கொள்கையின் தந்தை, ஜான் டால்டன் 1766ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே. பலவித நீர்மங்களின் ஆவியழுத்தத்தை கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை கண்டறிந்தார்.

 இவர் மிகச்சிறிய பிளக்க முடியாத அடிப்படை பொருளுக்கு அணு என்று பெயரிட்டார். நவீன அணுக்கோட்பாட்டை உருவாக்கிய ஜான் டால்டன் 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தன்னுடைய 77வது வயதில் மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

செப்டம்பர் 6 (September 6)

 கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். 

நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள்.

 ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.

1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர்.

1776 – கரிபியன் தீவான குவாதலூப்பேயை சூறாவளி தாக்கியதில் 6000 பேர் கொல்லப்பட்டனர்.

1860ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி அமெரிக்க சமூகப் பணியாளர், எழுத்தாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஜேன் ஆடம்ஸ் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் ஸீடர்வில் கிராமத்தில் பிறந்தார். 



1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியின் படூக்கா நகரைக் கைப்பற்றினர்.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் தென் கரோலினாவின் மொரிஸ் தீவில் இருந்து விலகினர்.

1873 – இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.

1885 – கிழக்கு ருமேலியா பல்கேரியாவுடன் இணைந்தது.

1889ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், வழக்கறிஞராகவும் விளங்கிய சரத் சந்திர போஸ் பிறந்தார்.

1901 – அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.

1921ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பார்கோடை கண்டறிந்தவர்களுள் ஒருவரான நார்மன் ஜோசப் உட்லேண்ட், நியூ ஜெர்சியிலுள்ள அட்லாண்டிக் நகரத்தில் பிறந்தார்.

1930 – ஆர்ஜெண்டீனாவின் அதிபர் ஹிப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1936 – கடைசி தாஸ்மானியப் புலி தாஸ்மானியா, ஹோபார்ட்டில் இறந்தது.

1939 – இரண்டாம் உலகப் போர்: தென்னாபிரிக்கா ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.

1946 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.

1932 – கனடாவின் முதலாவது தொலைக்காட்சி நிலையம், CBFT-TV, மொன்ட்றியாலில் திறக்கப்பட்டது.

1951ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.


1955 – துருக்கியில் இஸ்தான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.

1966 – தென்னாபிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்ற அமர்வின் போது குத்திக் கொலை செய்யப்பட்டார்.

1968 – சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1970 – ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1990 – யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

1991 – ரஷ்யாவின் லெனின்கிராட் நகரம் மீண்டும் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1997 – வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.

2006 – ஐரோப்பியத் தமிழ் வானொலி,மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.

பிறப்புக்கள்

1968 – சாயிட் அன்வர், பாகிஸ்தானின் துடுப்பாளர்

இறப்புகள்

1998 – அகிரா குரோசாவா, ஜப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1910)

2007 – லூசியானோ பவரொட்டி, இத்தாலியப் பாடகர் (1935)

சிறப்பு நாள்

பல்கேரியா – இணைப்பு நாள் (1885)

பாகிஸ்தான் – பாதுகாப்பு நாள்

சுவாசிலாந்து – விடுதலை நாள் (1968)

சிந்தனை துளிகள்:

வீட்டின் ஜன்னலை திறந்து வைத்தால்தான் அழுக்குக் காற்று வெளியேறும். புதிய காற்று உள்ளே வரும். அதுபோல இதயத்தின் பூட்டிய கதவுகளை திறந்து விடவேண்டும். ஏனென்றால் புதிய காற்று அப்போதுதான் வரும்.



உலக வரலாற்றில் இன்று
World history today

வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - செப்டம்பர் 06 !!

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !


வரலாற்றில் இன்று 06.09.2018

September 6, 2018

செப்டம்பர் 6 (September 6)


"ஜான் டால்டன்



இன்றைய வரலாற்று நிகழ்வுகள்...!,

வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. !,

 செப்டம்பர் 06 !!,

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !,

வரலாற்றில் இன்று 06.09.2018,

September 6, 2018,

முக்கிய நிகழ்வுகள்:


 நிகழ்வுகள்:,

பிறப்புக்கள்,

இறப்புகள்,

சிறப்பு நாள்,

Bright Zoom.










உலக வரலாற்றில் இன்று 06-09-2018 World history today உலக வரலாற்றில் இன்று 06-09-2018 World history today Reviewed by Bright Zoom on September 07, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.