பெரிய கண்ணாடிப் பாலம்!


பெரிய கண்ணாடிப் பாலம்!

நீளம் மற்றும் உயரத்தில் உலகில் முதலிடம் பெறும் கண்ணாடிப் பாலம் சீனாவில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது! மத்திய சீனாவின் ஹீனான் மாகாணத்தில் ஷாங்ஜியாஜியில் உள்ள அவதார் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாலம் 400 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டது. 3300 மீட்டர் உயரத்தில் பாலம் தொங்குகிறது! இதில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவமாக இருக்கிறது. பாலத்தை தினமும் மிகச் சரியாகப் பராமரிக்கும் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது!

ஒளிரும் தவளை!

உலகில் ஒளிரும் தவளை அர்ஜென்டினாவில் சாண்டஃபே என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! காலை வெளிச்சத்தில் பச்சை,...மஞ்சள்,....சிவப்பு,...நிறத்தில் இருக்கும் இந்தத் தவளை இரவில் நீலம் பச்சை நிறங்களை வெளிப்படுத்துகின்றனவாம்! ப்ரொஸீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்ஸஸ் என்னும்இதழில் இது குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது! குறைந்த அலை நீளத்தில் ஒளியை கிரகித்து நீண்ட அலை நீளத்தில் ஒளியைப் பிரதிபலிப்பதால் இந்த ஒளிரும் தன்மை ஏற்படுகிறது! அது சரி, "பத்து தவளையிருந்தா கரண்ட் கட் ஆனா இன்வெர்ட்டரா யூஸ் பண்ணலாம் போலிருக்கே!'' என்கிறான் ஒரு சின்னப் பயல்!

கோளை விழுங்கும் கோள்!

சூரியன் போன்ற கோள் தனக்கு அருகில் உள்ள சிறிய கோள் ஒன்றை விழுங்குவதை "ஹபிள்' விண்வெளித் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. தமது சுற்று வட்டத்தில் செல்லும் கோளை விழுங்கும் வல்லமை விண்மீன்களுக்கு உண்டு என முன்னரே வானியலாளர்கள் அறிந்துள்ளனர். எனினும் இப்போதுதான் முதல் தடவையாக அதற்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாகக் கிடைத்துள்ளன.
"வாப்ஸ் 12 பி' (WAPS12B) என அழைக்கப்படும் இந்த வெளிக்கோள் முழுவதுமாக அழிவதற்கு இன்னும் பத்து மிலி ஆண்டுகள் வரை பிடிக்கும் என வானியலாளர்கள் கூறுகிறார்கள். இக்கோள் தனது விண்மீனுக்கு அருகே அமைந்துள்ளது. 1.1 நாட்களில் தனது சூரியனை இது சுற்றி வருகிறது. இதன் சராசரி வெப்பநிலை 1500 செ.கி.ஆகும். 

Bright Zoom

பெரிய கண்ணாடிப் பாலம்! பெரிய கண்ணாடிப் பாலம்! Reviewed by Bright Zoom on September 14, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.