காடை வளர்ப்பில் காசு கொட்டுது!

அசைவ உணவுப் பிரியர்கள் ஆடு, கோழிக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பும் இறைச்சியாக காடை இருக்கிறது. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, சாம்பல் சத்து, கலோரி போன்றவை காடையில் நிறைந்திருக்கிறது. இதனால் காடை இறைச்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், காடை வளர்ப்பு தொழில் தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது.
இதற்கு அதிக இடம் தேவையில்லை. ஒரு சதுர அடியில் 5 காடைகளை வளர்க்கலாம். கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம். அதனால் எல்லா தட்பவெப்ப நிலைகளையும் இது தாக்குப்பிடித்து வளரும். குஞ்சுகள் 5 முதல் 6 வாரத்துக்குள் இறைச்சிக்காக விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துவிடும். இதனால் முதலீடு செய்த ஒன்றரை மாதத்திலே வருமானம் பெற முடியும். ஒரு கோழி வளர்க்கக்கூடிய இடத்தில் 5 முதல் 7 காடைகளை வளர்க்கலாம்.
தீவனத்தை புரதச்சத்தாக மாற்றும் திறன் காடைகளுக்கு உண்டு. அதனால் இவைகளுக்கு கோழிகளைப் போல் தடுப்பூசி போடத்தேவையில்லை.
காடை வகைகளில் ‘ஜப்பானிய காடை’ குறிப்பிடத்தக்க இனம். இதற்கான பண்ணையை அமைப்பதற்கு மேடான, நீர் தேங்காத இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பண்ணையின் நீளவாட்டு பகுதி, கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். காற்று வீசும் திசைக்கு குறுக்கே பண்ணை அமைந்தால் நல்லது. இரண்டு பண்ணைகளுக்கு இடையே குறைந்த பட்சம் 30 அடி இடைவெளி தேவை. பண்ணையின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. நீளத்தை தேவைக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளலாம்.
கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டு சுவர் களின் உயரம் 5 முதல் 7 அடி வரை இருத்தல் வேண்டும். 1.5 அடி உயர பக்கவாட்டு சுவரின் மேல் 5 அடி உயர கம்பி வலையை பொருத்த வேண்டும். பண்ணையை, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து தொலைவில் அமைப்பது நல்லது.
ஆழ்கூள வளர்ப்பு முறை, கூண்டுகள் வளர்ப்பு முறை ஆகிய இருவிதத்தில் காடை குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணையையும், உபகரணங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். ஆழ்கூள வளர்ப்பு முறையில் முதலில் ஆழ்கூளத்தை அப்புறப்படுத்தி உட்புற சுவர்களை தரமான கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின்னர் உமியை பரப்பி, அதன்மேல் சொரசொரப்பான தாள்களை பரப்ப வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளை சோதித்து ஏதேனும் பழுது இருந்தால் சரி செய்ய வேண்டும். தடுப்பான்கள் 30 செ.மீ முதல் 45 செ.மீட்டர் உயரம் வரை இருக்க வேண்டும். தகரம், தடிமனான அட்டைகள், பிளைவுட் போன்ற பொருட்களை தடுப்பான்களாக பயன்படுத்தலாம். ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் என்ற அடிப்படையில் விளக்குகளை வெப்பத்திற்காக அமைக்க வேண்டும்.
காடை குஞ்சுகள் நீர் அருந்துவதற்கு ஆழமில்லாத தட்டுகளை பயன்படுத்த வேண்டும். குஞ்சுகள் அந்த தட்டுகளில் மூழ்கி இறந்து விடாமல் இருக்க, கோலி குண்டுகளை சில நாட்கள் போட்டுவைக்கலாம். குடிநீர் மற்றும் தீவன கலன்களை வெப்பம் கிடைக்கும் இடத்தின் விளிம்பில் வைக்க வேண்டும்.
காடைகளை கூண்டுகளில் வளர்ப்பதாக இருந்தால் ஒவ்வொரு கூண்டையும், 5 அல்லது 6 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு அடுக்கையும் 2 அறைகளாக பிரிக்க வேண்டும். அகலம் 60 செ.மீ, நீளம் 60 செ.மீ மற்றும் உயரம் 25 செ.மீ இருக்க வேண்டும். எச்சத்தை கீழே விழாமல் தடுக்க ஒவ்வொரு அடுக்கின் கீழே ஒரு தட்டு வைக்கப்பட வேண்டும். குடிநீர் மற்றும் தீவன தொட்டிகள் கூண்டின் முன்புறமும், பின்புறமும் வைக்க வேண்டும்.
இறகுகளின் வண்ணம் மற்றும் தோற்றத்தை வைத்து ஆண், பெண் காடைகளை 3 வாரத்தில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். பெண் காடைகளின் இறகுகள் நீளமாகவும், கூர்மையாகவும் இருக்கும். தொண்டை மற்றும் மார்பு பகுதிகளில் கரும்புள்ளிகள் காணப்படும். ஆண் காடைகள் பழுப்புநிற இறகுகளை கொண்டதாக இருக்கும். இவற்றின் தொண்டை மற்றும் மார்பு பகுதியில் கரும்புள்ளிகள் காணப்படாது. ஆண் (சேவல்) மற்றும் பெண் (பெட்டை) காடைகள் பாலினம் கண்டறியப்பட்டவுடன் அவைகளை பிரித்து வளர்க்க வேண்டும். பெட்டைகளை 6 வார பருவத்தில் முட்டையிடும் பிரிவுக்கு மாற்றி விட வேண்டும்.
இனவிருத்தி காலங்களில் ஆண் காடை இரவு நேரங்களில் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருக்கும். பெண் காடைகள் விரைவில் பருவம் எய்தி 6 முதல் 7 வார பருவத்துக்குள் முட்டையிட ஆரம்பித்து விடும்.
5 அல்லது 6 காடைகளுக்கு ஒரு முட்டையிடும் பெட்டி வைக்கலாம். பெட்டியின் அளவு நீளம் 20 செ.மீட்டரும், அகலம் 9 செ.மீட்டரும், உயரம் 20 செ.மீட்டரும் இருக்க வேண்டும். ஒரு முட்டை 8 முதல் 13 கிராம் வரை எடை கொண்டதாகும். 8–வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 சதவீதம் என்ற நிலையை அடையும். முட்டையிடாத பெட்டைகளை பண்ணையில் இருந்து நீக்கி விட வேண்டும்.
அடை முட்டைகளை சேகரிக்கும்போது அதிக கவனம் தேவை. ஏனெனில் முட்டையின் ஓடுகள் எளிதில் உடையக்கூடியதாகும். 10 முதல் 24 வார பருவத்தில்தான் காடைகளுக்கு அதிக கருத்தரிக்கும் திறன் இருக்கும். பெட்டைகளின் கருத்தரிக்கும் திறனானது சேவல்களை பிரித்த பின்னர், 10 அல்லது 12 நாட்கள் வரையிலும் நீடிக்கும். ஆனால் கருத்தரிக்கும் சதவீதம் 3 நாட்களுக்கு பிறகு வீழ்ச்சி அடையும்.
பொதுவாக முட்டைகள் பொரிப்புத்திறன் ஒரு நாளைக்கு 5 சதவீதம் அளவில் குறையும். குஞ்சு பொரிப்புத்திறனும் காடைகளின் வயதை பொறுத்தே அமையும். 6 முதல் 24 வார பருவம் வரைதான் குஞ்சு பொரிப்புத்திறன் அதிகம் காணப்படுகிறது. பிறந்து ஒரு நாளே ஆன காடை குஞ்சுவின் எடை 7 கிராம் முதல் 12 கிராம் வரை இருக்கும். 4 முதல் 5 வாரங்களில் காடைகளை விற்பனை செய்யலாம். விற்பனையின் போது ஒரு காடையின் எடை 160 கிராம் முதல் 180 கிராம் வரை இருக்கும்.
சராசரியாக ஒரு காடை, ஒரு நாள் 30 முதல் 32 கிராம் தீவனம் உட்கொள்ளும். மக்காச்சோளம், கம்பு, எண்ணெய் நீக்கிய அரிசி தவிடு, சோயா பிண்ணாக்கு, கருவாடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை காடைகளுக்கு உணவாக கொடுக்கலாம். காடைகள் அதிக பட்சமாக, ஒரு வருடத்துக்கு 280 முட்டைகள் இடுகின்றன.
குஞ்சு பொரிப்புத்திறனை பெருக்க, முட்டைகளை சேமிக்கும் முன்பு புகைமூட்டம் செய்ய வேண்டும். கோழி குஞ்சுகள் பொரிக்க கோழிகளுக்கு பயன்படுத்தப்படுகிற அடைப்பான் மற்றும் பொரிப்பான்களையே இதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் அடைப்பானில் உள்ள முட்டை அடுக்கும் தட்டில் மாறுதல் செய்ய வேண்டும்.
காடை முட்டைகளில் இருந்து குஞ்சு பொரிக்க 17 முதல் 18 நாட்கள் ஆகும். அடை முட்டைகளை, அடைப்பானில் இருந்து 14–ம் நாள் குஞ்சு பொரிப்பானுக்கு மாற்ற வேண்டும். குஞ்சுகள் 17–ம் நாள் பொரித்தவுடன் வெளியே எடுக்க வேண்டும். 14 நாட்கள் அடைப்பானிலும், 15 முதல் 17–வது நாட்கள் வரை பொரிப்பானிலும் வைத்திருக்க வேண்டும். சராசரி ஈரப்பதம் 55 முதல் 60 சதவீதமாக இருக்க வேண்டும். அடைப்பானில் முட்டைகளை திருப்புதல் மிகவும் அவசியமானதாகும்.
காடை வளர்ப்பு தொழிலில் விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் ஈடுபட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம். காடை வளர்த்தால் கை நிறைய வருமானம் பெறலாம்.
சுவையும், மருத்துவ குணங்களும்
காடை இறைச்சி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். தோலில் குறைந்த அளவே கொழுப்பு இருக்கிறது. ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள் நிறைந்ததாக காடை இறைச்சி உள்ளது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும்தன்மை காடை இறைச்சிக்கு இருக்கிறது. மூட்டு அழற்சி நோயை இந்த இறைச்சி கட்டுப்படுத்து கிறது. ரத்த சோகை நோய் இருப்பவர்கள் இந்த இறைச்சியை அதிகம் உண்ணலாம். ரத்தத்தில் உள்ள நச்சுகள், கன உலோகங் களை இது வெளியேற்ற உதவுகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சத்தும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. நினைவாற்றலையும், மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை வலுவடைய செய்யும். இதயத்தசைகளை பலப்படுத்தும். இளமையை பாதுகாக்கும். தலைமுடியையும் வலுவாக்கும். காடை இறைச்சியும், முட்டையும் கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அதிக பலன் அளிக்கும்

Reviewed by Bright Zoom
on
September 03, 2018
Rating:
No comments: