ஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்?

ஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்?



யு.பி.எஸ்.சி., நடத்தும் ஐ.சி.எஸ்., தேர்வை எழுத வேண்டுமெனில் சில தகுதிகள் பெற்றிருப்பது அவசியம்.

1. குடியுரிமை - விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2. வயது - அந்த ஆண்டின் ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவாராகவும் இருக்கவேண்டும்.

வயது வரம்பு தளர்ச்சி:
அ) எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படுகிறது. இவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
ஆ) ஓ.பி.சி., பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டு சலுகை அளிக்கப்படுகிறது. இவர்கள் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இ) முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் 5 வருட சலுகை அளிக்கப்படுகிறது. இவர்கள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: வயது வரம்பு சான்றிதழுக்கு மெட்ரிக் அல்லது மேல்நிலைப்பள்ளி சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

3. குறைந்தபட்ச கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்கவேண்டும். இளநிலைத்தேர்வின் இறுதி கட்ட தேர்வு எழுதி இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இரண்டாம் கட்ட தேர்வு எழுதும் போது கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., போன்ற தொழில் முறை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

4. எத்தனை முறை தேர்வு எழுதலாம்:
இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளின் முதல் முயற்சியில்வெற்றிபெறுவதே சிறந்தது. இளம்வயதிலேயே பணியில் சேர்ந்து சாதிக்க முடியும். பொதுவாக நான்கு முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஓ.பி.சி., பிரிவினருக்கு 7 முறை அனுமதி வழங்கப்படுகிறது.

எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் 35 வயது வரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பிரிலிமினரி தேர்வில் கலந்து கொண்டால் கூட ஒரு வாய்ப்பை பயன்படுத்தியதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிரிலிமினரி தேர்வில் ஒரு பேப்பர் மட்டும் எழுதினாலும், தேர்வில் கலந்து கொண்டதாகவே கருதப்படும். எனவே தேர்வுக்கு சரியாக தயார் செய்துகொள்ளவில்லை என கருதினால் தேர்வு எழுதுவதை தவிர்த்துவிடுவதே சிறந்தது.

5. உடல் தகுதி: இந்திய ஆட்சிப்பணியில், போலீஸ் சர்வீசுக்கு குறைந்தபட்ச உயரம் ஆண்களுக்கு 165 செ.மீ., பெண்களுக்கு 150 செ.மீ., எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு குறைந்தபட்ச உயரம் ஆண்களுக்கு 160 செ.மீ., பெண்களுக்கு 145 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் ஆண்களுக்கு 84 செ.மீ.,. பெண்களுக்கு 70 செ.மீ., விரிவடையும் போது 5 செ.மீ., அதிகமாகவும் வேண்டும். உடல் ஊனமுற்றவர்கள் ஐ.பி.எஸ்., ஆக முடியாது. ஆனால் ஐ.ஏ.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., போன்ற பணிகளில் சேரலாம்.

6. கட்டணம்: இதற்கு அதிகமாக கட்டணம் ஒன்றும் செலுத்த தேவையில்லை. ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இனி இந்த ஐ.சி.எஸ்., தேர்வுவைப்பற்றி பார்ப்போம் இந்த தேர்வுகள் இரு பிரிவுகளை உள்ளடக்கியது.

அவை
அ) சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு- இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்ட தேர்வு எழுதலாம். இந்த அப்ஜெக்டிவ் முறை தேர்வில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

ஆ) சிவில் சர்வீசஸ் முக்கிய தேர்வு- இது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வடிவில் அமைந்திருக்கும். இதில் வெற்றி பெறுபவர்கள் பல பிரிவுகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

By:Bright Zoom.

ஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்? ஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்? Reviewed by Bright Zoom on September 08, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.