போட்டித் தேர்வுகள் ஒரு அறிமுகம்

போட்டித் தேர்வுகள் ஒரு அறிமுகம்

நம்மில் பலரும் பல வேலைகளை பார்த்து வருகிறோம். சிலர் சுய தொழில் செய்யலாம், சிலர் தனியார் துறையில் வேலை செய்யலாம் , சிலர் திரைகடல் ஓடி திரவியம் தேடலாம் , சிலர் நம் நாட்டின் முதுகெலும்பாக கூறப்படும் வேளாண்மையில் வியர்வை சிந்தலாம். அனைவருக்கும் ஓர் ஆசை உண்டு. நாமும் அரசாங்க வேலை பார்த்தல் நன்றாக இருக்குமே என்று.


அரசாங்க வேளையில் என்ன இருக்கிறது?


உண்மையில் ஒன்றும் இல்லை!

தொழில் செய்வதிலோ, வெளி நாட்டில் செல்வம் திரடுவதிலோ உள்ள உடனடி வளர்ச்சி இதில் இல்லை! வேளாண்மை செய்வதில் உள்ள சுயதன்மையும் இதில் இல்லை!!!


வேறு என்னதான்  இதை நோக்கி மக்களை ஈர்க்கிறது?


வேலை பாதுகாப்பு. இது எண்ணத தனியார் துறையிலும் கிடைக்காதது. ஆறிலக்கத்தில் சம்பளம் வாங்கிய IT துறையினர் உலக பொருளாதார மந்தம் வந்தபோது ஐம்பது ரூபாய் கூட இல்லாமல் தெருவில்  நின்றது நினைவிருக்கலாம். வேலை பாதுகாப்பு-இதுவே அரசு வேலையின் ஆதார சுருதி!


இந்த அரசு வேலையை எவ்வாறு பெறுவது?


அதற்குத்தான் போட்டிதேர்வுகள் உதவுகின்றன.


போட்டிதேர்வுகள் என்றால் என்ன?


இதுவும் கல்லூரி தேர்வு போல் ஒரு தேர்வு தானா என்ற எண்ணம் தோன்றலாம். ஆம்  இதுவும் ஒரு தேர்வு தான். ஆனால் பள்ளி கல்லூரி தேர்வு போல் அல்ல.


இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


இரண்டுக்கும் இரண்டு வித்தியாசங்கள்.

1 . கல்லூரி தேர்வில் தோல்வி அடையலாம் ஆனால் போட்டி தேர்வில் தோல்வி அடையமுடியாது!


2. கல்லூரி தேர்வில் பாஸ் செய்தால் பட்டம் கிடைக்கும். போட்டிதேர்வில் தேர்வானால் வேலை கிடைக்கும்.


இரண்டாவது வித்தியாசம் குறித்து அதிக சிக்கல் இல்லை. அது எப்படி போட்டி தேர்வில் தோல்வியடைய முடியாது? ஆம், போட்டி தேர்வில் தேர்வடையவோ அல்லது தேர்வு பெறாமல் போக மட்டுமே வாய்ப்பு உண்டு. இதில் பள்ளி கல்லூரி தேர்வில் உள்ளது போல் எந்த தேர்ச்சி மதிப்பெண்ணும் இல்லை. தேவையான பணியிடத்திற்கு திறமையுடையவர்களை  தேர்ந்தெடுக்கும் ஒரு வடிகட்டும் வேலையே போட்டி தேர்வு ஆகும். 


இதை யார் நடத்துவது?


போட்டி தேர்வுகளை நடத்தி அரசு பணியாளர்களை தேர்தெடுக்க பல அமைப்புகள் செயல் படுகின்றன. மத்திய அரசுக்கு தேவையான உயர் பதவிகளுக்கு தேர்வுகள் நடத்த UPSC என்ற அமைப்பு உள்ளது. இதே போல் தமிழக அரசின் பதவிகளுக்கு தேர்வு நடத்த TNPSC என்ற தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  செயல் படுகிறது. இதே போல் சில குறுப்பிட்ட துறையின் தேர்வுகளை நடத்த SSC, RRB, USRB, TRB, போன்ற பல தேர்வு வாரியங்கள் உள்ளன.


இதை பற்றி எங்கு தெரிந்து கொள்வது?


ஒவ்வொரு முறையும் தேர்வுகள் நடத்தும் போதும் இது குறித்து பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்படும். UPSC, SSC, RRB,  போன்ற மத்திய அரசுப்பணிகள் குறித்த அறிவிப்புகள்  Employment News என்ற வார இதழில் வெளிவரும்.

UPSC தொடர்பான தகவல்களைhttp://www.upsc.gov.in/  என்ற இணைய தளத்தில் பெறலாம்.

TNPSC  தொடர்பான தகவல்களைhttp://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் பெறலாம்.

மேலும் பிற தேர்வு அமைப்புகளின் இணைய தள முகவரிகள் :

SSC- http://ssc.nic.in/

RRB- http://www.rrbchennai.net/

USRB- http://www.tn.gov.in/tnusrb/

TRB- http://trb.tn.nic.in/

போட்டித் தேர்வுகள் ஒரு அறிமுகம் போட்டித் தேர்வுகள் ஒரு அறிமுகம் Reviewed by Bright Zoom on September 08, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.