இன்றய செய்திகள் நவம்பர் 27

இன்றய செய்திகள் நவம்பர் 27

உலகச் செய்திகள்
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகவும், பத்திரமாகவும் தரையிறங்கியது. கடந்த மே மாதம் 5ஆம் தேதி இன்சைட் என்ற விண்கலத்தை நாசா ஏவியது. சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்த இன்சைட், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் செவ்வாய் கிரகத்தில் தனது தடத்தைப் பதித்தது.

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோள்களை நாளை மறுநாள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் சேர்த்து பி.எஸ்.எல்.வி சி-43 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை மறுநாள் காலை 9.59 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
மாநிலச் செய்திகள்
கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் முடிய உள்ளதால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



மாவட்டச் செய்திகள்
கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிடுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரயிலில் செல்லவுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்களாக வேதாரண்யம் நகரம் இருளில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களுக்கும் டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், திருத்துறைப்பு+ண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இன்றய செய்திகள் நவம்பர் 27 இன்றய செய்திகள் நவம்பர் 27 Reviewed by Bright Zoom on November 27, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.