குங்குமம் தயாரிப்பு..!

குங்குமம் தயாரிப்பு..!

நம் அன்றாட வாழ்வில் வீடுகளிலும் கோவில்களிலும் நாம் பயன்படுத்தும் ஓர; மகத்தான, மங்களகரமான பொருள்களில் குங்குமமும் ஒன்று. அதனுடய தேவை மற்றும் பயன்பாடுகளும் அதிகமாக இருப்பதால், குங்குமம் தாயாரித்து விற்பனை செய்தால் அதன் மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள் கிழங்கு வெங்காரம்படிகாரம் (வெங்காரம், படிகாரம் இவை இரண்டும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்).எலுமிச்சை பழச்சாறுநல்லெண்ணெய்வாசனைத் திரவியம் சிறு துளி தயாரிக்கும் முறை :

❄முதலில் மஞ்சள் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்கி அதனை நன்கு பொடியாக அரைத்து, சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

❄பின்பு வெங்காரம் மற்றும் படிகாரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு, அதனையும் பொடி போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

❄ பிறகு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் பொடித்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெங்காரம், படிகாரத்தை தயாராக எடுத்து வைக்கவும்.

❄எலுமிச்சைப்பழ சாறுடன் அரைத்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெங்காரம், படிகாரக் கலவையுடனும் சேர;த்து கலந்து கொள்ள வேண்டும்.

❄பின்பு அந்த கலவையை நிழழில் போட்டு உலர;த்த வேண்டும். நன்கு உலர;ந்தப்பிறகு செங்கல் தூள் நிறத்தில் இருக்கும். அதில் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர;த்து லேசாக பிசைந்து விட்டால் குங்குமம் இன்னும் டார;க் நிறமாக வரும்.

❄இந்த குங்குமத்துடன் மல்லிகை, தாழம்பூ எஸன்ஸ் களை இரண்டு அல்லது மூன்று துளி விட்டு கலந்து விட்டால் வாசனையாகவும் இருக்கும்.

❄ மஞ்சளின் வாசனையுடன் தயாரித்த குங்குமத்தை சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து அருகில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யலாம்.




குங்குமம் தயாரிப்பு..! குங்குமம் தயாரிப்பு..! Reviewed by Bright Zoom on February 14, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.