விளக்கேற்றும் திரி தயாரிப்பு !!

விளக்கேற்றும் திரி தயாரிப்பு !!

Bright Zoom  TNPSC Tamil

 எளிய முறையில் வீட்டில் இருந்தே தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்ற சரியான தொழில் விளக்கேற்றும் திரி தயாரிப்பு ஆகும். இவற்றில் பல வகைகள் உண்டு, அதை சரியான முறையில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். இனி விளக்கேற்றும் திரியை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி விரிவாகக் காண்போம்.

திரியின் வகைகள் :
தாமரைப்பதாமரைப்பூதிரிபஞ்சுத்திரவாழைத்தண்டு நார் திரிவெள்ளெருக்கந்திரி திரி தயாரிக்கும் முறைகள் :

தாமரைப்பதாமரைப்பூதிரி : தாமரைப்பதாமரைப்பூ உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு காய வைத்த இரண்டு பொருட்களையும் சேர்ந்து நன்கு திரித்து பேங்கிங் செய்ததும், தாமரைத்தண்டு திரி விற்பனைக்கு தயாராகிவிடும்.

பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் உருவாக்கப்படும் திரியானது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல தரமான பருத்தியை தேர்ந்தெடுத்து, அதனை திரித்தால் பஞ்சுத்திரி தயாராகிவிடும்.

வாழைத்தண்டு நார் திரி: வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி பின்பு அதனை திரியாக திரித்து விற்பனைக்கு அனுப்பலாம்.

வெள்ளெருக்கந்திரி: வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விற்பனைக்கு அனுப்பலாம்.

விற்பனை முறைகள்:

 மேலே குறிப்பிட்ட முறையில் திரிகளை தயார் செய்து சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து அண்டை வீடுகள் மற்றும் சிறிய பெரிய கடைகளுக்கு கொடுத்து நல்ல மகத்தான இலாபம் அடையலாம்.


விளக்கேற்றும் திரி தயாரிப்பு !! விளக்கேற்றும் திரி தயாரிப்பு !! Reviewed by Bright Zoom on February 19, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.