உலகில் மிகவும் அழகான 10 பாம்பு இனங்கள்...!
Top 10 Most beautiful
Snakes in The World...!
சில பாம்பு இனங்கள் பார்பதற்கு அழகாக இருக்கின்றன. ஆனால் அவற்றுள் சில கொடிய விஷத்தை கொண்டதாக இருக்கும். கடித்துவைத்துவிட்டால் உயிர் பிழைப்பதே கடினமாக ஆகிவிடும். அதேசமயம் சில பாம்பு இனங்கள் அழகாக இருப்பதோடு விஷமற்றதாகவும் இருக்கின்றன. இவற்றை செல்ல பிராணிகளாக வளர்க்க விரும்புவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காக இவ்வகை பாம்புகள் விற்பனை கூட செய்யப்படுகின்றன.
உலகில் பலவகை பாம்புகள் இருப்பினும் அவை அனைத்துமே வெவ்வேறு நீளம், நிறம், பண்புகள் கொண்டவை. சில பாம்புகள் பார்க்கும் போதே பயமுறுத்தும், சில பாம்புகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றும். அவ்வாறான உலகின் அழகான 10 பாம்பு இனங்களை பார்ப்போம்.
1. ஃப்ளூ ரேசர்ஸ் சினேக் :
ஃப்ளூ ரேசர்ஸ் எனப்படும் இவ்வகை பாம்புகள் அமெரிக்கா முழுமையும் காணப்படுகின்றன. எனினும் ராக்கி மலைத்தொடர்களின் கிழக்காக பரவலாக வாழ்கின்றன. ஈஸ்டர்ன் ரேசர்ஸ் என்றும் அழைக்கப்படும் இவ்வகை பாம்புகள் மனித நடமாட்டம் அற்ற பகுதிகளிலே அதிகம் வசிப்பதை விரும்புகின்றன. பக்கவாட்டில் நீள நிறத்தையும் அதன் மேற்புறத்தில் பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தையும் கொண்டிருக்கும் இவை 3 அடி முதல் 5வரை வளரக்கூடியவை. ஃப்ளூ ரேசர்ஸ் பாம்புகள் விஷத்தன்மை அற்றவை மேலும் இவை அழிவின் விளிம்பில் உள்ள பாம்பு இனமாகும்.
2.க்ரீன் ட்ரீ பைத்தான் :
2.க்ரீன் ட்ரீ பைத்தான் :
அழகிய தோற்றம் கொண்ட இந்த பாம்பானது பெரும்பாலும் மரங்களில் மட்டுமே வாழும் இயல்புடையது. மிக அரிதான சந்தர்பங்களில் மட்டுமே இதனை நிலத்தில் காண முடியும். இவை நீயூகினியாவில் உள்ள மலைக்காடுகள், இந்தோனேசியாவில் உள்ள தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கேப்பியர் தீபக்கற்பத்தை பூர்விகமாக கொண்டு வாழ்கின்றன. இவற்றின் நிறம் மரத்தின் இலைகளை ஒத்த பச்சை நிறத்தில் இருப்பதால் மரக்கிளைகளில் ஒளிந்திருக்கும் இவைகளை இனம் காணுவது கடினம் ஆகும். 5 முதல் 6 அடி நீளம் வரை வளரக்கூடிய இவை ஒன்றறை கிலோ எடை வரை இருக்கும்.
3.ஈஸ்டர்ன் கோரல் சினேக் :
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மணல் மற்றும் சதுப்பு நில பகுதிகளில் காணப்படும் இவ்வகை பாம்புகள் விஷத்தன்மை வாய்ந்தவை. நிலத்தடி குழிகள் மற்றும் இலைக்குவியல்களில் வசிக்க விரும்பும் இவற்றின் சராசரி ஆயுட்காலம் இன்னும் அறியப்படவில்லை. எனினும் இவை 7 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உடலின் முழுவதும் சீரான இடைவெளியில் உள்ள கருப்பு மற்றும் கருஞ்சிகப்பு வளையங்கள் குறுகிய மஞ்சள் வளையங்களால் பிரிக்கப்பட்டுள்ளன. இவை பாம்புகள் பல்லி, தவளை மற்றும் சிறிய அளவிலான பாம்புகளை உணவாக உட்கொள்கின்றன.
பிரேசிலியன் ரெயின்போவ் போவா பாம்புகள் சுமார் 5 முதல் 7 அடி நீளம் வரை வளரக்கூடியவை ஆகும். இவை கருஞ்சிகப்பு நிறங்களிலிருந்து பிரகாசமாக ஆரஞ்சு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றை மாறுபட்ட கோணங்களில் காணும் போது வெவ்வேறு மாறுபட்டநிறங்கள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தில்லாத இந்த பாம்புகள் செல்ல பிராணிகளாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. 1980 மற்றும் 1990களில் சரினாம் என்ற நாட்டிலிருந்து கணிசமாக ஏற்றுமதி செய்யப்பட்டன, எனினும் இன்று இவ்வகை பாம்புகள் மிகவும் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
5.அமலினிஸ்டிக் பர்மிஸ் பைத்தான் :
உலகின் 5 மிகப்பெரிய பாம்பு இனங்களில் இது 3வது பெரிய பாம்பு இனமாக கருதப்படுகிறது. இவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பரந்த வெப்பமண்டல பகுதிகளில் வாழ்கின்றன. நீர்நிலைகளிலும், மரங்களிலும் வசிக்கும் இவை 12 முதல் 18 அடி நீளம் வரை வளரக்கூடியவை. வெள்ளை நிறத்தில் மஞ்சள் திட்டுகளுடன் கூடிய இதன் எடை சுமார் 5 முதல் 75 கிலோ வரை இருக்கும். பர்மிஸ் மலைப்பாம்புகள் நீந்துவதிலும் மரம் ஏறுவதிலும் திறன் படைத்தவையாகும்.
6.இருடீசண்ட் சீல்ட் டெய்ல் :
தென்னிந்தியாவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன இந்த பாம்புகள். குறிப்பாக வேயநாடு மாவட்டத்தில் காணப்படுகின்றன மற்றும் பாகிஸ்தானின் தெற்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேற்புறத்தில் பழுப்பு நிறத்தையும், பக்காவாட்டில் வெளிர் நீள நிறத்தையும் அடிப்பகுதியில் மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ள இந்த அழகான பாம்புகளின் பண்புகளை பற்றிய தகவல்கள் முழு அளவில் அறியப்படவில்லை.
பிரேசிலின் வடமேற்கு பகுதிகள், வெனிசுலா, கொலம்பியா, பொலுவியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படும் இந்த பாம்புகள் விஷத்தன்மையற்றவை. வெப்ப மண்டல காடுகள் மற்றும் ஈர நிலங்களில் வாழ விரும்பும் இவை உலகின் அழகான பாம்பு இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 6 அடி நீளம் வரை வளரக்கூடிய இவை வேற எந்த விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை காட்டிலும் பெரிய அளவிலான முன்புற பற்களை கொண்டுள்ளன. மரகத பச்சை நிற மேற்புற உடலில் ஏற்ற இறக்கமான சமச்சீரற்ற வெண்ணிற கோடுகள் மற்றும் மஞ்சள் நிற அடிப்பகுதியை கொண்டுள்ள இந்த பாம்புகள் பல்லி, தவளை, சிறு பறவைகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரவலாக வாழும் இது விஷமற்ற பாம்பு இனமாகும். சுமார் 4 முதம் 5 அடு நீளம் வரை வளரக்கூடிய இதன் உடல் பொதுவாக மஞ்சள் நிறமும் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமும் அதன் மீது சமச்சீரற்ற புள்ளிகளும் கொண்டிருக்கும். ஆனால் இந்த பாம்பு இனங்களில் சில நிறமிகளை இழந்து வெள்ளை நிறத்தில் காட்சி அளிப்பதால் உலகின் அழகான பாம்பு இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இவை செல்ல பிராணியாகவும் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
9. கோண்டுரான் மில்க் சினேக் :
மற்றொரு அழகான பாம்பு இனமான இது, சிகப்பு நிறமும் அதன் மீது கருப்பு மற்றும் மஞ்சள் வளையங்களை கொண்டுள்ளது. வடக்கும் மற்றும் தென் அமெரிக்கா பகிதிகளில் காணப்படும் இது, விஷத்தன்மையற்றது. 5 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த பாம்புகள் கோண்டுராஸ், நிக்கிரகூவா மற்றும் வடகிழக்கு கோஸ்டாரிக்கா போன்ற வெப்ப மண்டல பகுதிகளிலும், நடுத்தர உயரமான பகுதிகளிலும் வாழ்கின்றன. இவை தனது இரைகளை மலைப்பாம்புகளை போல் இறுக்கி கொன்று அதன் பிறகு உண்கின்றன.
10.இண்டிகோ ஈஸ்டர்ன் ரேட் சினேக்
விஷத்தன்மையற்ற இது கரு நீலப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாம்பு இனமானது பெரும்பாலும் அமெரிக்காவின் கிழக்கு பகுதிகளில் காணப்படுகிறது. பலபலக்கும் கருநீல நிறத்தில் இருக்கும் இதனை பிரகாசமான வெளிச்சத்தில் பார்க்கும் போது கருமை சார்ந்த ஊதா நிறத்திலும் காட்சியளிக்கும். 4 முதல் 7 அடி நீளம் வரை வளரக்கூடிய இது, சராசரியா 1 முதல் 4 கிலோ எடை வரை இருக்கும்.
உலகில் மிகவும் அழகான 10 பாம்பு இனங்கள்...!
Reviewed by Bright Zoom
on
March 26, 2019
Rating:
No comments: