இஞ்சி மரப்பா தயாரிப்பு ...

இஞ்சி மரப்பா தயாரிப்பு ...

 இஞ்சி மரப்பான் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதனுடைய சுவை, இது சுவையானது மட்டும் அல்ல ஆரோக்கியமனதும் கூட. பஸ், கார், விமான பயணத்தின் போது சிலருக்கு வயிற்றை பிரட்டும், குமட்டல் வரும், சிலர் வாந்தியும் எடுப்பது உண்டு. வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி மரப்பானை சாப்பிட்டால் உடனே நிவாரணம் கிடைக்கும். இப்படிப்பட்ட இஞ்சி மரப்பானை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் மகத்தான இலாபம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பிஞ்சு இஞ்சி அல்லது சுக்குப் பொடி

2. கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லம்

3. நெய்

தயாரிக்கும் முறைகள்:

🍁இஞ்சியைத் தோல் சீவி மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

🍁அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கம்பி பாகுபதம் வரும்வரை காய்ச்சுங்கள். (சிறிது பாகை எடுத்து தண்ணீரில் போட்டால் கரையாமல் இருக்கும். இது தான் பாகு பதம்).

🍁இந்த பக்குவம் வந்தவுடன் அரைத்த இஞ்சி விழுதை பாகில் சேர்த்து கைவிடாமல் நன்றாக கலக்கவும்.

🍁இந்தக் கலவை நன்றாக நுரைத்து திக்கான பதம் வந்ததும் அரை டேபிள் ஸ்பு+ன் நெய் விட்டுக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டுங்கள். ஆறியதும் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சு+ப்பரான இஞ்சி மரப்பான் விற்பனைக்கு ரெடி.

விற்பனை முறைகள்:

  இந்த இஞ்சி மரப்பானை பிளாஸ்டிக் கவரில் நன்றாக பேக்கிங் செய்து விற்பனை நிலையங்கள் மற்றும் அனைத்து பஸ் நிலையங்களில் உள்ள சிறு, குறு வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்யலாம் மற்றும் வெளி நாட்டிக்கு ஏற்றுமதி செய்து நிறைவான இலாபம் பார்க்கலாம்.

இஞ்சி மரப்பா தயாரிப்பு ... இஞ்சி மரப்பா தயாரிப்பு ... Reviewed by Bright Zoom on March 17, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.