இந்தியாவின் பிரமாண்ட குகை கோவில் எல்லேரா ...
உலகிலேயே வேறு எங்கும் காணப்படாத கோயில்களைக் கொண்டது தான் எல்லோரா குகை.
- அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்டு உலகப் புகழ் பெற்றது தான் இந்த குகை. இந்த குகை அவுரங்கபாத் நகரில் கோயில் ஒன்றின் அடி முதல் நுனி வரை மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.
- மலையின் மூன்று பக்கங்களும் செங்குத்தாக வெட்டப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்ட வெளியில் இருந்து சிறு கல் கூட எடுத்து வரப்படவில்லை. கோயிலில் உள்ள அனைத்தும் இதே மலையின் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இங்கு மொத்தம் 34 குகைகள் குடையப்பட்டன. எண்கள் இடப்பட்ட 34 குகைகளும் எண்களிடப்படாத 7குகைகளும் ஜைன , பவுத்த இந்து மத நம்பிக்கைகளை உணர்த்துவதாக உள்ளன. இதில் 16 ஆம் எண் குகைதான் உலகமே வியந்து கொண்டிருக்கும் கைலாசநாதர் கோவில்.
- இந்த கோயில் 150 ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ளன.மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இதில் அடங்கியுள்ளனர். கோயில் முழுவதையும் தங்களுடைய தோளில் தாங்குவதைப் போல மிகப்பெரிய யானைச் சிற்பங்கள் அடியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
- இந்த கைலாசநாதர் கோயிலில் சிற்பிகள் எது எது எங்கே இருக்க வேண்டுமென்று தங்களுக்குள் நன்கு தீர்மானித்துவிட்டு அற்புதமாக வடிவமைத்துள்ளனர். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதத்தக்க வகையில் அற்புதமான பக்தியோடு கலை ரசனையோடு ஈடுபாட்டோடு இந்த சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். ஓவியங்களை தீட்டியுள்ளனர்.
இந்தியாவின் பிரமாண்ட குகை கோவில் எல்லேரா ...
Reviewed by Bright Zoom
on
March 27, 2019
Rating:
No comments: