கனமழை பெய்யும்... ரெட் அலர்ட் - முக்கியச் செய்திகள் ! காலை நேரச் செய்திகள் ஜூலை 17

கனமழை பெய்யும்... ரெட் அலர்ட் - முக்கியச் செய்திகள் !
காலை நேரச் செய்திகள்
ஜூலை 17

உலகச் செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜுலை 22-ம் தேதி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக டிரம்புடன் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மாநிலச் செய்திகள்
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு 1903 புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜூலை 18,19 மற்றும் 20ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் பீகார், அசாம், திரிபுரா, மேற்குவங்கம் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் டிஎன்டிபி (தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்) hவவிள:ஃஃவnவி.வளெஉhழழடள.பழஎ.inஃடஅள என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்டிபி இணையதளத்தில் அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், புதிய பாட திட்டத்திற்கான கற்றல், கற்பித்தல், பயிற்சி வளங்கள் போன்றவை மிக எளிமையான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடவேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அவசரகால ஊர்தி சேவை திட்டத்திற்கு கூடுதலாக 121 அவசர சிகிச்சை ஊர்திகள் 26 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
நித்ரா நாட்காட்டி உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !
மாவட்டச் செய்திகள்
சந்திரகிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

149 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பூர்ணிமா அன்று நிகழ்ந்த பகுதி சந்திர கிரகணத்தை, சென்னையில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆய்வின்போது சென்னை மாநகராட்சியில் 3,247 கடைகள் தொழில் உரிமம் இல்லாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 7 நாட்களுக்குள் உரிமம் வாங்காவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்போட்டி காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் (19ஆம் தேதி) முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பில்) டி20 தொடரின் 4வது சீசன், ஜூலை 19ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தொடங்குகிறது. இதற்கான லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியுள்ளது.





கனமழை பெய்யும்... ரெட் அலர்ட் - முக்கியச் செய்திகள் ! காலை நேரச் செய்திகள் ஜூலை 17 கனமழை பெய்யும்... ரெட் அலர்ட் - முக்கியச் செய்திகள் ! காலை நேரச் செய்திகள் ஜூலை 17 Reviewed by Bright Zoom on July 17, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.