Bright Zoom Today News செப்டம்பர் 25 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
செப்டம்பர் 25
காலை நேரச் செய்திகள்

இந்தியாவை நோக்கி நகரும் ஹிகா புயல் - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து :

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் :

மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஐநா.சபை கொண்டாடியது. நியூயார்க்கில் ஐநா.தலைமை அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் பெயரால் சூரிய சக்தி பூங்காவை பிரதமர் மோடி, வங்காள பிரதமர் ஷேக் ஹசினா, தென்கொரிய அதிபர் மூன் ஜே உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

மாநிலச் செய்திகள்
மத்திய அரசு திட்டம் :

மதுரை, கோவை, பெங்கள ரு உட்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  கிராமங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் :

மருத்துவ படிப்பில் பட்டம் பெற்ற பிறகு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள், கிராமங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவை நோக்கி நகரும் ஹிகா புயல் :

ஓமன் அருகே உருவான ஹிகா புயல் இன்று இந்தியாவை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னமானது மேற்கு-தென்மேற்காக நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் எனவவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாதாசாகேப் பால்கே விருது :

இந்தி திரையுலகில் 50 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக வலம்வரும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு, திரைத்துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அமல் :

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 5 ஆண்டுகளாக இருந்த அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்க தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் 8 போட்டு காட்ட வேண்டும். இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டச் செய்திகள்
வெள்ள அபாய எச்சரிக்கை :

மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு :

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
முத்தரப்பு தொடர் :

டாக்காவில் நடக்கவிருந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி நேற்று மழையால் கைவிடப்பட்டதால், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

  விஜய் ஹசாரே டிராபி :

நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி தொடக்க போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்தது.
Bright Zoom Today News செப்டம்பர் 25 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  செப்டம்பர் 25  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on September 25, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.