யார் இந்த வள்ளல் அமீர் ஹம்ஸா ?
இந்திய சுதந்திர வரலாற்றில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு பல லட்சங்களை (இன்றைய மதிப்பில் பல கோடிகள்) வாரி வழங்கி, அந்த போராட்டத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த தியாகி அமீர் ஹம்சா தனது இறுதி நாட்களில் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தார். வறுமையின் காரணமாக, மருத்துவ செலவுகளை கூட கவனிக்க மிகுந்த சிரமப்பட்டார். இந்த தியாகிக்கு தமிழக அரசு உதவி செய்ய மறந்த நிலையில், சில நல்லுள்ளங்கள் தியாகி அமீர் ஹம்சா அவர்களுக்கு உதவினர். இந்நிலையில் அவரை மரணம் தழுவியது.
யார் இந்த அமீர் ஹம்சா?
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை பர்மாவில் துவக்கியபோது, அங்கு தங்கம் மற்றும் வைர நகைகள் வியாபாரம் செய்துவந்துள்ளார் அமீர் ஹம்சா. நேதாஜியின் படைக்கு ஏகப்பட்ட பொருளுதவி செய்ததால் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, கடுமையான விசாரணைக்குள்ளானார்.
வள்ளல் அமீர் ஹம்ஸா அவர்களும் அவரின் தந்தையாரும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு பல லட்சங்களை அள்ளித் தந்திருக்கின்றனர்.
1943 –ல் நேதாஜி கலந்து கொண்டு பேசிய கூட்டத்தில் நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலையை ஏலம் விட்டனர். அந்த மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் வள்ளல் அமீர் ஹம்ஸா அவர்கள்.
ஆரம்பத்தில் அமீர் ஹம்ஸாவின் தந்தையார் இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜியின் படைப்பிரிவில் அமீர் ஹம்ஸா இடம் பெற்றிருப்பதைக் கண்டு, பாசத்தின் காரணமாக அமீர் ஹம்ஸா அவர்களை வீட்டில் சிறைவைத்தார்.
இது பற்றிக் கேள்வி பட்ட நேதாஜி, அமீர் ஹம்ஸாவின் தந்தையாரை அழைத்து இந்திய தேச விடுதலையின் அவசியம் குறித்து உணர்ச்சிப் பொங்க உரையாடினார்.
நேதாஜியின் பேச்சால் கவரப்பட்ட அமீர் ஹம்ஸாவின் தந்தையார் அங்கேயே “தமது பாக்கெட்டிலிருந்து செக் புக்கை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான காசோலையை நேதாஜியின் கையில் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், உடன் அழைத்து வந்த தமது மகன் அமீர் ஹம்ஸாவை இந்த தேச விடுதலைக்காக உங்கள் கையில் ஒப்படைக்கின்றேன்” என்றார்கள்.
நேதாஜியின் 47 –வது பிறந்த நாளில் (23.01.1944) ஒரு லட்சத்துக்கான காசோலையோடு, தான் கையில் அணிந்திருந்த வைர மோதிரத்தையும் பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
(நூல்: நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம்.)
மத்திய அரசாங்கம் தரும் பென்ஷனை மட்டுமே நம்பியிருக்கும் இவர், தியாகிகள் கோட்டாவில் தனக்கு ஒரு கேஸ் ஏஜென்ஸி அனுமதி வழங்கக் கோரி பல வருடங்களாக போராடி இருக்கிறார். ‘மத்தவங்களுக்கு 40 லட்சம் ஆகும்! உங்களுக்கு வேணா 20 லட்சத்துல முடிச்சுக் கொடுக்குறோம். சீக்கிரம் தொகையை ஏற்பாடு பண்ணுங்க!’ என்று ஓர் அமைச்சர் இவருக்கு வாக்குறுதி கொடுத்தாராம் ??
நமது இந்திய தேசத்தின் பொன் விழா ஆண்டில் சென்னையில் வசித்து வந்த வள்ளல் அமீர் ஹம்ஸாவை கௌரவிக்க இந்த தேசத்தின் எந்த ஒருவருக்கும் மனம் வரவில்லை!

Reviewed by Bright Zoom
on
October 29, 2019
Rating:
Reviewed by Bright Zoom
on
October 29, 2019
Rating:

No comments: