Bright Zoom Today News அக்டோபர் 15 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
அக்டோபர் 15
காலை நேரச் செய்திகள்

நாளை முதல் வேலை நிறுத்தம் - முக்கியச் செய்திகள் !


உலகச் செய்திகள்
ஐ.பி.எம் விருது :

வெள்ளத்தடுப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இந்திய மென்பொருள் நிபுணர்கள் குழுவுக்கு ஐ.பி.எம் விருது கிடைத்துள்ளது.

மாநிலச் செய்திகள்
ரயில் சேவை :

தமிழகத்தில் 3 பேசஞ்சர்  ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் - கரூர், பழனி - கோயம்புத்தூர், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசு உத்தரவு :

தரமற்ற குடிநீரை அருந்துவதால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முயற்சியாக, வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் நீரின் தரத்தை அறிய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருவாய் அதிகரிக்கும் :

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

2 நாள் தகவல் தொழில்நுட்ப பயிற்சி :

தமிழ்நாட்டில், 602 ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஆய்வக தகவல் மேலாண்மை அமைப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தகவல் பதிவு மேலாளர்களுக்கு, 2 நாள் தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாளை முதல் வேலை நிறுத்தம் :

தமிழகம் முழுவதும் வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மாவட்டச் செய்திகள்
தீபாவளி பண்டிகை-பயணிகள் முன்பதிவு :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணிக்க தற்போது வரை 51,208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

அருவியில் குளிக்க தடை :

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் :

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வருகிற 18ம் தேதி நடக்கிறது என்று வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

விடுமுறை :

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை :

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் கண்டுள்ளனர். கேப்டன் விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்.

கால்பந்து தகுதி சுற்று :

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

புரோ கபடி :

புரோ கபடி போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டு எலிமினேட்டர் சுற்றில் பெங்கள ரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.






Bright Zoom Today News அக்டோபர் 15 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  அக்டோபர் 15  காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on October 15, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.