ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் (அப்ரண்டீஸ்)பயிற்சிப் பணி... 2792 பேருக்கு வாய்ப்பு!

#BrightZoomJops
2/27/2020
வேலைவாய்ப்பு தகவல்...


ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் (அப்ரண்டீஸ்)பயிற்சிப் பணி...
2792 பேருக்கு வாய்ப்பு!


PMITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பயிற்சிப் பணி!  2792 பேருக்கு வாய்ப்பு!நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் பணியாளர்களைக்கொண்டு செயல்பட்டுவரும் பெருமைக்குரியது ரயில்வே துறை. மொத்தம் 18 ரயில்வே மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளை ஒருங்கிணைக்கிறது கிழக்கு ரயில்வே துறை. கொல்கத்தாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இத்துறையானது ஹவுரா உட்பட  நான்கு டிவிஷன்களை ஒருங்கிணைத்து செயல்பட்டுவருகிறது. கிழக்கு ரயில்வே துறையின்கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் பல்வேறு துறைகளில் 2019-20ம் ஆண்டுக்கான அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.

காலியிடங்கள்: வெல்டர், வயர்மேன், ஸ்டீல் மெட்டல் வொர்க்கர், லைன்மேன், பெயின்டர், கார்ப்பென்டர், ஃபிட்டர் என பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிகளின்படி மொத்தம் 2792 பேருக்கு உதவித்தொகையுடன் கூடிய அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி: பல்வேறு தொழிற்பிரிவுகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதால்  பணிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் 50% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ந்தெடுக்கப்போகும் துறைகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். Welder (Gas & Electric) / Steel Metal Worker / Lineman / Wireman / Carpenter / Painter போன்ற பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

உதவித்தொகை: ரயில்வே விதிமுறைப்படி பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும்  ஐடிஐயில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rrcer.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி / எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.3.2020. மேலும் முழு விவரங்களுக்கு www.rrcer.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் (அப்ரண்டீஸ்)பயிற்சிப் பணி... 2792 பேருக்கு வாய்ப்பு! ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் (அப்ரண்டீஸ்)பயிற்சிப் பணி...  2792 பேருக்கு வாய்ப்பு! Reviewed by Bright Zoom on February 28, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.