பேரிடர்கள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்...!

#BrightZoomTNPSC - 2020
பேரிடர்கள் பற்றிய
பொது அறிவு வினா விடைகள்...!

💥 எத்தனை மில்லியன் மக்கள், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வெவ்வேறு வகையான பேரிடர்களால் பாதிக்கப்படுகிறனர்?

- 232 மில்லியன் மக்கள்

💥 எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வினை எளிதில் கையாளும் விதத்தில் முன் கூட்டியே மேற்கொள்ளும் பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 - மாதிரிப் பயிற்சி

💥 புவிப்பரப்பில் உள்ள பாறைப் பகுதி நகர்வதால் நிலப்பகுதி திடீரென அசைவது ---------- ஆகும்.

- நிலநடுக்கம்

💥 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர;க்கா நிலநடுக்கத்தின் ரிக்டர; அளவு என்ன?

- 8.1 ரிக்டர்

💥 உயரமான சரிவு மிகுந்த பகுதியிலிருந்து சிதைந்த பாறைகள் நகர்வதை ---------- என்கிறோம்.

- நிலச்சரிவு

💥 முக்கியமான இயற்கை பேரிடர்களில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது எது?

 - புயல்

💥 உலகின் வெப்ப மண்டலப் புயலில் எத்தனை சதவீத புயல் இந்தியாவில் உருவாகிறது?

- 10 சதவீதம்

💥 வெப்பமண்டல புயலான 'வர்தா" சென்னையை தாக்கிய ஆண்டு?

- 2016, டிசம்பர் 12

💥 எத்தனை கி.மீ தொலைவிலிருந்து இடியின் ஓசையைக் கேட்க முடியும்?

- 16 கி.மீ

💥 இடி மின்னலின் பாய்வு வினாடிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் பயணிக்கும்?

 - 80,000 கி.மீ

💥 ஒரு இடி மின்னல் பாய்வின் சராசரி நீளம் எவ்வளவு?

- 3 முதல் 4 கி.மீ

💥 'விழு! மூடிக்கொள்! பிடி!" என்ற பயிற்சி எந்த பேரிடருக்கு முக்கியமானது?

- நிலநடுக்கம்

💥 இந்தியாவில் எத்தனை சதவீத பகுதிகள் வறட்சிக்கு உட்பட்டவை ஆகும்?

 - 68%

💥 இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 5 அல்லது 6 --------- புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் உருவாகுகின்றன.

- வெப்பமண்டல புயல்கள்
பேரிடர்கள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்...! பேரிடர்கள் பற்றிய  பொது அறிவு வினா விடைகள்...! Reviewed by Bright Zoom on March 08, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.