Bright Zoom Today News ஏப்ரல் 21 மாலை நேரச் செய்திகள் : அடுத்த 2 நாட்களுக்கு... ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் -

Bright Zoom Today News
ஏப்ரல் 21 மாலை நேரச் செய்திகள் :
அடுத்த 2 நாட்களுக்கு... ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் - செய்திகள் !

உலகச் செய்திகள்
ஜூன் 1ஆம் தேதி வரை :

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்
தமிழக அரசு எச்சரிக்கை :

கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தக்கூடாது என தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது நிவாரண நிதி :

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான தொகை நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் :

நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

50 லட்சம் ரூபாய் நிதி :

ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும், உயிரிழந்தோரின் சடலங்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு நடத்தப்படும் எனவும் முதமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை :

கொரோனா வைரஸ் தொற்றில் மும்பை, புனே, இந்தூர், கொல்கத்தா மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் சில மாவட்டங்கள் மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், இந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீறப்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

பணிகள் நிறுத்தம் :

ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு :

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சபாநாயகர் ஆலோசனை :

கொரோனா தடுப்பு குறித்து மாநில சட்டமன்ற சபாநாயகர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

மாவட்டச் செய்திகள்
போக்குவரத்துக் கழகம் வெளியீடு :

ஊரடங்கு முடிந்த பின் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை :

திருவள்ள ர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றும் 350 காவலர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

ஆலைகள் செயல்பட அனுமதி :

தூத்துக்குடி, கோவில்பட்டியிலுள்ள தீப்பெட்டி ஆலைகள் செயல்பட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்
ஆஸ்திரேலியா திட்டம் :

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

Bright Zoom Today News ஏப்ரல் 21 மாலை நேரச் செய்திகள் : அடுத்த 2 நாட்களுக்கு... ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் - Bright Zoom Today News  ஏப்ரல் 21 மாலை நேரச் செய்திகள் :  அடுத்த 2 நாட்களுக்கு... ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் - Reviewed by Bright Zoom on April 21, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.