Bright Zoom Today News
ஏப்ரல் 29 மாலை நேரச் செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? மே 2ஆம் தேதி.. அமைச்சரவைக் கூட்டம் - செய்திகள் !!

உலகச் செய்திகள்
தாயகம் திரும்புவது கட்டாயம் :

அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினரில் சுமார் 2 லட்சம் பேர் வரும் ஜூன் மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

முழு ஆதரவு-ஹிலாரி கிளிண்டன் :

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, கடந்த முறை அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்
மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் :

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பாராட்டு :

தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு :

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

மழை பெய்ய வாய்ப்பு :

தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவசர சட்டம் :

பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25மூ வரை பிடித்துக்கொள்ளும் வகையில் கேரள அரசு அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு :

சென்னை, மதுரை, கோவை நகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் உத்தரவு :

58 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ அறிவிப்பு :

பொது ஊரடங்கு முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் :

சென்னை மாநகராட்சி பகுதியில் அரசு, தனியார் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடி மதிப்பிலான திட்டம் :

டெல்டா மாவட்டங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மே 13ஆம் தேதி வரை :

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மே 13ஆம் தேதி வரை கூட்டம் கூட தடை விதிக்கப்படுவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் :

ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள், டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Reviewed by Bright Zoom on April 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.