Bright Zoom Today News ஜுன் 18 மாலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுன் 18 மாலை நேரச் செய்திகள்


மீண்டும் விலையில்லா உணவு வழங்க.. தமிழக முதல்வர் உத்தரவு - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது... இந்தியா:

லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கிற்கு, சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது என இந்தியா கூறியுள்ளது. கடந்த 6ஆம் தேதி பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு எதிராக சீனா நடந்து கொள்வதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

வேலைவாய்ப்புத்துறைக்கு ஏற்பட்ட பெரிய அடி:

ஆஸ்திரேலியாவில் பொதுமுடக்கம் காரணமாக வேலைவாய்ப்புத்துறைக்கு ஏற்பட்ட பெரிய அடி பேரழிவுக்கு வழிவகுப்பதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

மசோதா நிறைவேறியது:

நேபாளத்தின் மேல் சபையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை புதுப்பிப்பதற்கான மசோதா நிறைவேறியது.

மாநிலச் செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் தடை:

ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோவில் ஆலய ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு:

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ரூ.50,000 கோடியில் தொழிலாளர்களின் நலன், ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பை பெருக்க புதிய திட்டங்களை தொடங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு:

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் தர வேண்டுமென அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்ட செயலிகள்:

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய சுமார் 52 செயலிகளை தேசிய பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டு தெரிவித்து இருக்கிறது.

மாவட்டச் செய்திகள்
மீண்டும் விலையில்லா உணவு வழங்க உத்தரவு:

பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் சென்னை உள்ளிட்ட பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாளை முதல்...:

நாளை முதல் சென்னையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவிருக்கும் நிலையில், மாவட்டத்தில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

விளையாட்டுச் செய்திகள்
கேரள மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு:

பிசிசிஐ-யின் ஏழு ஆண்டு கால தடைக்காலம் முடிவடைய இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த்-ஐ ரஞ்சி அணியில் சேர்க்க கேரள மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

சாம்பியன் பட்டம்:

ஜெர்மனியின் முன்னணி கால்பந்து லீக்கான பன்டேஸ்லிகாவின் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக பேயர்ன் முனிச் அணி உறுதி செய்துள்ளது.

Bright Zoom Today News ஜுன் 18 மாலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுன் 18 மாலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on June 18, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.