Bright Zoom Today News ஜுலை 08 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 08 காலை நேரச் செய்திகள்



இன்று முதல் 10 நாட்களுக்கு...
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
 - முக்கியச் செய்திகள் !

உலகச் செய்திகள்
ஒரு கோடி பேர் முன்பதிவு:

செவ்வாய் கிரகத்திற்கு, நாசா அனுப்பும் விண்கலத்தில் தங்கள் பெயர்களை பொறிக்க, ஒரு கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு:

சீனாவின் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு அமெரிக்காவில் விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.

அமெரிக்கா உறுதி:

விசா கட்டுப்பாடுகளில் இந்திய மாணவர்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
8 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது:

தமிழகத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இதுவரை 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல்...:

மராட்டியத்தில் நாளை (ஜுலை 09) முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கடன் வழங்க ஒப்புதல்:

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேம்படுத்த, உலக வங்கி சுமார் ரூ.3,000 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது:

தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதிற்கு இதுவரை 115 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. மருந்து கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இணையவழி கருத்தரங்கம்:

கூகுள் மீட் செயலி வழியாக சென்னை பல்கலைக்கழகம், காஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நிலம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

விளையாட்டுச் செய்திகள்
கரிபீயன் பிரிமியர் லீக்:

இந்த ஆண்டிற்கான கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு முடிவு:

இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல், ஐ-லீக் உள்ளிட்ட முக்கியத் தொடர்களில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்க வேண்டும் என்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முடிவு எடுத்துள்ளது.

இன்று தொடக்கம்:

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.



Bright Zoom Today News ஜுலை 08 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 08 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 08, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.