Bright Zoom Today News ஜுலை 15 காலை நேரச் செய்திகள்

Bright Zoom Today News
ஜுலை 15 காலை நேரச் செய்திகள்


கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பு - செய்திகள்..!!

உலகச் செய்திகள்
சர்வதேச விதிகளுக்கு முரணானது-அமெரிக்கா:

தென்சீனக் கடலை சீனா உரிமை கொண்டாடுவது சர்வதேச விதிகளுக்கு முரணானது என அமெரிக்கா கொள்கை முடிவை வெளியிட்டுள்ளது.

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது:

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
ஆன்லைன் வகுப்புகளை நடத்த நேரக் கட்டுப்பாடு:

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எந்தெந்த வகுப்புகளுக்கு, எவ்வளவு நேரம் நடத்தலாம் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்றும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 45 நிமிடம் என்ற அளவில் 2 வகுப்புகளை எடுக்கலாம் என்றும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 30-45 நிமிடம் என்ற அளவில் 4 வகுப்புகளை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு பாடம்:

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் மூலம் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

வரும் 17ஆம் தேதி:

ஐ.நா சபையில் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார்.

டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறை:

வங்கி மற்றும் அஞ்சலகங்களில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் டெபாசிட் பணத்தை மொத்தமாக எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறையை மத்திய நேரடி வரிகள் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்:

அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க நேற்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செய்திகள்
முதலமைச்சர் இன்று பயணம்:

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

விளையாட்டுச் செய்திகள்
லா லிகா கால்பந்து போட்டி:

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில், கிரானடா அணியை தோற்கடித்து முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

2 நாட்கள் ஆலோசனை:

விளையாட்டு போட்டிகளை தொடங்குவது குறித்து மாநில விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ காணொளி காட்சி மூலம் 2 நாட்கள் ஆலோசனை நடத்தவுள்ளார்.



Bright Zoom Today News ஜுலை 15 காலை நேரச் செய்திகள் Bright Zoom Today News  ஜுலை 15 காலை நேரச் செய்திகள் Reviewed by Bright Zoom on July 15, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.