நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலை தேர்வுகள் – இன்று முதல் தொடக்கம்!!
இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நடத்தப்படும் ஜேஇஇ முதல்நிலை நுழைவுத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
ஜேஇஇ முதல்நிலை தேர்வு:
இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் இன்ஜினியரிங் பயில ஜேஇஇ நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் ஜேஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஜேஇஇ தேர்வுகளில் சில மாற்றங்கள் உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.
இந்நிலையில் ஜேஇஇ தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நான்கு கட்டங்களாக நடைபெறும் எனவும், நான்கு கட்ட தேர்வுகளிலும் மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்றாற்போல் கலந்து கொள்ளலாம் எனவும் அதில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு தேர்வுகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜேஇஇ முதல்நிலை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் (இன்று) பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வுகள் முகமை இந்த தேர்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறும் போது கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments: