உலக வரலாற்றில் இன்று(20-2-21) Bright Zoom Today News உலக சமூக நீதி தினம்.

 உலக வரலாற்றில் இன்று(20-2-21)

Bright Zoom Today News

வரலாறு : உலக சமூக நீதி தினம்... சமூக நீதிகளைக் காத்திடுவீர்...!

உலக சமூக நீதி தினம்



🌟 ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினமாக கொண்டாடப்படுகிறது.


🌟 உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே இடைவெளி அதிகமாகிக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும்.


🌟 ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.


கா.நமச்சிவாயம்


✍ சிறந்த தமிழறிஞர், புலவர், தமிழ் பேராசிரியரான கா.நமச்சிவாயம் 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்தார்.


✍ இவர் சிறுவயதிலேயே நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களை கற்றுத் தேர்ந்தார். பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர், வகுப்பில் முழு நேரமும் பாடம் நடத்தமாட்டார். உலக விவகாரங்களை அலசுவதற்காக கடைசி பத்து, பதினைந்து நிமிடங்கள் ஒதுக்குவது இவரது வழக்கம். மாணவர்கள் கேள்வி கேட்க, இவர் பதில் கூறுவார்.


✍ அந்த நாட்களில் வித்வான் பட்டங்கள் சமஸ்கிருத அறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. அதனால் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றவர்களுக்கும் வித்வான் பட்டம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். இவரது கருத்தை அரசு ஏற்று அதை செயல்படுத்தியது.


✍ 1905ஆம் ஆண்டு வரை மாணவர்கள் ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாட நூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையை போக்க இவரே தமிழ் பாட நூல்களை எழுதினார். 


✍ பிருதிவிராஜன், கீசகன், தேசிங்குராஜன், ஜனகன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். நாடகமஞ்சரி என்ற பெயரில் 10 நாடகங்களையும் எழுதினார். இவர் ஆத்திச்சூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.


✍ எளிய நடையில் உரைநடை நூல்களை எழுதிய கா.நமச்சிவாயம் 1936ஆம் ஆண்டு மறைந்தார்.


முக்கிய நிகழ்வுகள்

✈ 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி மெர்க்குரி விண்கலத் திட்டம் : ஜோன் கிளென், பூமியை மூன்று முறை சுற்றி, பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.


👉 1987ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.


👉 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவன் மறைந்தார்.


 


உலக வரலாற்றில் இன்று(20-2-21) Bright Zoom Today News உலக சமூக நீதி தினம். உலக வரலாற்றில் இன்று(20-2-21)  Bright Zoom Today News  உலக சமூக நீதி தினம். Reviewed by Bright Zoom on February 20, 2021 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.