2021ஆம் கல்வியாண்டிற்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் (NEET and JEE Exams 2021) குறித்து மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கடந்த 11ஆம் தேதியன்று கலந்துரையாடியது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்துகொண்டார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை ஆராய்ந்த கல்வித் துறை, அதனடிப்படையில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அவர், “நடப்பு கல்வியாண்டுக்கான ஜே.இ.இ- முதன்மை தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே என நான்கு முறை நடத்தப்படும். முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23-26 வரை சிபிடி முறையில் நடைபெறும். நீட் தேர்வைப் போல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படும். மாணவ-மாணவிகள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து, தேர்வை எழுதலாம்.
இந்த நான்கு தேர்வுகளில், மாணவர்கள் தங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு மாதத்தை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்ய முடியும். ஒரு மாணவர் நான்கு முறையும் தேர்வை எழுதினால் என்றால், அந்த நான்கு தேர்வில் எதில் அவர் சிறந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளரோ, அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மொத்தமுள்ள 90 கேள்விகளில் (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்களுக்கு 75 கேள்விகள் (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) மட்டும் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
No comments: