பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 3ம் கட்ட ,4ம் கட்ட நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு!
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ (JEE) மெயின் நுழைவு தேர்வின் மூன்றாம்கட்ட தேர்வுகள் வரும் ஜூலை 20 முதல் 25-ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 3ம் கட்ட நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு!
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 3ம் கட்ட நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு!
கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பொதுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜேஇஇ தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காத வகையில் நடப்பு கல்வி ஆண்டில் ஜேஇஇ தேர்வுகள் 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஏற்கனவே முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வுகள் மார்ச் மாதத்திலும் நடந்துவிட்டன. தொடர்ந்து, 3 மற்றும் 4ம் கட்ட தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மூன்றாவது கட்ட தேர்வுகள் வரும் ஜூலை 20 முதல் 25ம் தேதி வரையிலும், நான்காம் கட்ட ஜேஇஇ தேர்வுகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் வெளியிட்டார்.
மேலும், கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கின் காரணமாக ஜேஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜூலை 6 இரவு 11.50 மணி முதல் ஜூலை 8ம் தேதி இரவு வரையில் ஜேஇஇ தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் நான்காம் கட்ட ஜேஇஇ தேர்வுக்கு ஜூலை 9 முதல் ஜூலை 12 வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும், நடப்பு ஆண்டு தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கை 660ல் இருந்து 828 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: