Bright Zoom
மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2021-22க்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு
B.F.Sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர வரும் 19-ம் தேதி முதல் tnjfu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக (TNJFU) மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தில் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் உள்ள கீழ்காணும் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
1. B.F. Sc.(இளநிலை மீன்வள அறிவியல்) 3 ஆண்டுகள், 120 இடங்கள், அரசு உதவிபெறும் படிப்பு (aided)
2. B.Tech. Fisheries Engineering
(இளநிலை மீன்வளப் பொறியியல்), 4 ஆண்டுகள், 30 இடங்கள், அரசு உதவிபெறும் படிப்பு (aided)
3. B.Tech. Biotechnology (இளநிலை உயிர் தொழில்நுட்பவியல்), 4 ஆண்டுகள், 40 இடங்கள், சுயசார்பு படிப்பு (self-supporting (SS))
4. B.Tech. Food Technology (இளநிலை உணவு தொழில்நுட்பவியல் ), 4 ஆண்டுகள், 40 இடங்கள், சுயசார்பு படிப்பு (self-supporting (SS))
5. B.Tech. Energy and Environmental Engineering (இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுப்புற பொறியியல்), 4 ஆண்டுகள், 20 இடங்கள், சுயசார்பு படிப்பு (self-supporting (SS))
6. B.B.A., Fisheries Business Management (இளநிலை வனிக நிர்வாகவியல்-மீன்வள மேலாண்மை), 3 ஆண்டுகள், 20 இடங்கள், சுயசார்பு படிப்பு (self-supporting (SS))
7. B. Voc., Industrial Fish Processing Technology (இளநிலை தொழிற்கல்வி-மீன்பதன தொழில்நுட்பம்), 3 ஆண்டுகள், 25 இடங்கள், அரசு உதவிபெறும் படிப்பு (aided)
8. B. Voc., Industrial Fishing Technology (இளநிலை தொழிற்கல்வி-தொழில்முறை மீன்பிடி தொழில்நுட்பம்), 3 ஆண்டுகள், 20 இடங்கள், அரசு உதவிபெறும் படிப்பு (aided)
9. B. Voc., Industrial Aquaculture (இளநிலை தொழிற்கல்வி-தொழில்முறை மீன்வளர்ப்பு), 30 இடங்கள், அரசு உதவிபெறும் படிப்பு (aided)
10. B. Voc., Aquatic Animal Health Management (இளநிலை தொழிற்கல்வி-நீர்வாழ் உயிரினநல மேலாண்மை ), 3 ஆண்டுகள், 25 இடங்கள், அரசு உதவிபெறும் படிப்பு (aided)
கல்வித்தகுதி: HSC (10+2) அல்லது அதற்கு இணையான மேல்நிலை தேர்வில் தேர்ச்சி.
மேற்கண்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கு
விண்ணப்பங்களைப் ஆன்லைன் முறையில் மட்டுமே அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்களைப் பல்கலையின் www.tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
B.F. Sc/B.Tech ரூ.800/-
(SC/ST/SCA ரூ. 400/-)
B. Voc ரூ. 500/-
(SC/ST/SCA ரூ. 250/-)
விண்ணப்பம் தொடக்க தேதி: நாளை 19-08-2021
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365- 256430 / 9442601908 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழகத்தின் www.tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் அறியலாம்.
இ-மெயில்: ugadmission@tnjfu.ac.in
No comments: